வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கனகசுந்தரம் பாலகுமார்

கனகசுந்தரம் பாலகுமார் 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் மடதுவெளியைப் பிறப்பிடமாக கொண்ட
பாலகுமார் தனது ஆரம்பக் கல்வியை கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கற்ற பின்னர் யாழ் இந்து கல்லூரியில் உயர்கல்வியை பெற்றார் .மடத்துவெளி சனசமூக் நிலையத்தின் ஆரம்ப களம் தொட்டே அதன் வளர்ச்சிக்கு பாடுபட்ட இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.மடத்துவெளி சனசமூக நிலையத்தின் உதைபந்தாட்ட அணியின் முன்னணி தாக்குதல் வீரரான பாலகுமார் பல சாதனைகளை அந்த மண்ணில் படைத்துள்ளார் .இவர் 15. 01 . 1985 இல் தாயகத்தை விட்டு நீங்கி சுவிட்சர்லாந்தில் குடியேறினார் .சுவிசின் பாசல் நகரில் வசித்து வரும் இவர் இங்கேயும் தனது விளையாட்டு திறமையால் சிறப்புற புகழ் பெற்றார் .பாசல் தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகராகிய பாலகுமார் அதனை நிறுவினார்  இந்தக் கலக்கம் சுவிசிலேயே
முதன்முதலாகவும் ஒரே ஒருகழகமாகவும் பதிவு செய்து முறைப்படி சுவிசர்லாந்து கழகங்களுக்கு இணையாக லீக் எனப்படும்பிரிவில்  சம்மேளன அடங்கலில் உள்வாங்கப் பட்டதாகும் .இந்த கழகத்தின் அணித்தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து தொன்னூறுகளில் பல சாதனைகளைச் செய்ய வழிகாட்டினார்.சுவிற்ற்சர்லாந்தின் பல கழகங்களின் உருவாக்கத்துக்கும் சுற்றுப் போட்டிகளுக்கும் முன்னோடியாக  உதவி புரிந்தார் .இந்த கழகத்தின் மூலம் பல சமூக பங்களிப்புகளையும் ஆற்றி வந்துள்ளார் .இன்றும் பாசல் நகரின்  விளையாட்டு துறை இவரை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக