புதன், 28 செப்டம்பர், 2011

thirumathi (ராஜகோபால் )

பிரசன்னா  சாதுஜா (ராஜகோபால் )

புங்குடுதீவு பத்தாம் வட்ட்ரத்தை
பிறப்பிடமாக கொண்ட பிரசன்னா  சாதுஜா   (ராஜகோபால் ) கொக்குவிலில் ஆரம்பகல்வியை கற்ற பொது இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தார் .அங்கே சில ஆண்டுகள் ஆங்கில மூலக் கல்வி கற்ற பின்னர் சுவிசுக்கு புலம் பெயர்ந்து உயர்கல்வியை கற்று தேறினார் .தாயகத்தில் இருந்த காலத்தில் முறைப்படி பரத நாட்டியத்தை சாந்தினி சுப்பையாவிடம் கற்று தொடன்ர்து இந்தியாவிலும் நாடிய கல்வியை தொடர்ந்திருந்தார் .சுவிசுக்கு வந்ததும் பரதக்கலையை வாணி நடராசாவிடம் கற்று பின்னர் திருக்கொநேச்வர நடனாலயத்தில் தொடர்ந்தார் .வெகு குறைவான் காலத்திலேயே பரத்தின் நுணுக்கங்களை எல்லாம் கற்றதனால் 1996இல் பெர்னில் தனது அரங்கேற்றத்தை மேடையேற்றினார் .   திருக்கொனேஸ்வரா நடனப்   பள்ளியின் முதல் வரிசை மாணவிகளின் பட்டியலில் இடம்பிடித்து உரிய காலத்தில் அரங்கேற்றத்தை செய்து கொண்டார்.இந்த நடனப் பள்ளியில் அரங்கேற்றம் செய்த இரண்டாவது மாணவி இவராவார்.அரன்கேற்றதுடன் நின்று விடாது பரதனாடிய ஆசிரிய உரித்துக்கான கல்வியை மேற்கொண்டு அதற்கான தகுதியை அடைந்த இவர் தொடர்ந்து தான்  கற்ற கல்வியை வீணாக்காது மற்றவரும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கோடு சுவிசில் பற்றாக்குறையாக உள்ள நடன ஆசிரியர்களின் குறை நீங்கு முகமகவும் தானே ஒரு  புதிய நடனப் பள்ளியை ஆரம்பித்து  ஏராளமான மாணவர்களுக்கு நடனக் கலையை  புகட்டி வருகிறார்.தனது பிறந்த ஊரின் குலதெய்வமாம் கண்ணகியின் பெயரிலே  கண்ணகை பரத கூடம் என்ற பெயரில்தனது பாடசாலையை அழகுற நாமம் இட்டுள்ளது குறிப்பிடத் தக்கது  புகழ் போதை  இல்லாத இந்த ஆசிரியை ௨௦௧௦ இல் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் வேரும் விழுதும் நிகழ்வை தனது மாணவர்களை கொண்டு தனது நாட்டிய கோலங்களால் அழகுற  செய்தார் .இந்த நிகழ்வில் இவரது மாணவர்களின் தசாவதாரம் நாட்டிய நாடகம் பார்வையாளர்களை மெய் மறக்க செய்திருந்தது .இவரில் மாணவர்கள் பலர் நாட்டிய மயில் போன்ற நடன விழ போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான பரிசில்களை பெற்றுள்ளனர்.

செல்லத்துரை சதானந்தன்

செல்லத்துரை  சதானந்தன் 


புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை  பிறப்பிடமாகக் கொண்ட சதானந்தன் ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்தில் கற்றார் .எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த சதானந்தன் சுவிசின் பல மேடைகளில் ^^பாட்டிங் பாட்டிங் ^^ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை ஈழத்துக் கலைஞர்கள் கோமாளிகள்  பாணியில் நடத்தி புகழ் பெற்றார் .சிறந்த உதைபந்தாட்ட வீரராக விளையாட்டுக்  கழகங்களில்   களமாடிக் கொண்டிருந்த காலம் அது.எமது தமிழ் மக்களை மேற்கு நாடுகளின் தரத்துக்கு சிறந்த விளையாட்டு  வீரர்கள் ஆக்கச்  சரியான வழி எதுவென சிந்திக்கலானார் .அதன் பிரகாரம் சிறுவயதில் இருந்து படிப்படியாக முறையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ரீதியில் லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகத்தை உருவாக்கி பல வயதுப் பிரிவுகளிலும் வீரர்களை உள்வாங்கி பயிற்ருவித்து சுற்று போட்டிகளை சந்திக்க செய்தார் இதிலே பெரும் வெற்றிக  ளைக்   கண்டார் .சுவித்சர்லாந்தில்யே அதிக சாதனைகளை படைத்து அதிகூடிய வெற்றிக் கிண்ணங்களை பெற்று வருகிற ஒரு கழகம் இதுவாகும் .முக்கியமாக  புங்குடுதீவு  மண்ணை சேர்ந்த வீரர்களை பெரும்பாலும் உள்ளடக்கிய கழகம் இதுவேயாகும் .பல அமைப்புகளுடன் இணைந்து விளையாட்டுத் துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார் .அத்தோடு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திலும் தன்னை இணைத்து கொண்டு இன்று வரை அறிய பல பணிகளை செய்ய உறுதுணையாக இருந்துள்ளார் .மேலும்ஐரோப்பாவின் இயந்திரமாய
வாழ்க்கைக்கு மத்தியில் இசைக்குழுக்களை நடத்துவது கஷ்டமா என உணர்ந்து நவீன வடிவமான கரோக்கோ இசைக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார். சுவி மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் இசை நிகழ்சிகளை நடத்தி புகழோடு விளங்கும் இவரது சுவிஸ் ராகம் இசைக்குழு பெரும்பாலான தாயாக பணிகளுக்கென நிதிப் பங்களிப்பையும் செய்து வருகிறது.இந்த இசைக் குழுவின் அறிவிப்பாளராகவும்  இயக்குனராகவும் இருந்து வருகிறார் 

இராசையா சண்முகராசா

இராசையா சண்முகராசா 
 புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை
பிறப்பிடமாகக் கொண்ட சண்முகராசா ஆரம்பக்கல்வியை ஊரதீபு திருநாவுக்கரசு வித்தியாசாலையிலும் தொடர்ந்து கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியையும் கற்று தெரிய பின் எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு(Bern  )புலம் பெயர்ந்தார் .அந்த காலம்  எமது தாய் மொழியில் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் இல்லாத ஒரு காலம்.அதனை விட சுவிசுக்கு தமிழர் வந்த உடனேயே சுவிஸ் மொழிகளைக் கற்க முடியாத நிலை. சன்முகராசாவும் இன்னும் சில இளைஞர்களும் இணைந்து புதிய மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் விதமாக மனிதம் என்னும் பெயரில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்கினார்கள்.இந்த அமைப்பின் மூலம் மனிதம் என்னும் சஞ்சிகையை பிரசுரித்தார்கள். கணணி புழக்கம் இல்லாத அல்லது தமிழ் எழுத்து வரிவடிவம் வராத அந்த காலத்தில் வெறுமனே நிழல்படபிரதி எடுக்கும் முறையை மட்டும் பயன்படுத்தி இந்த சஞ்சிகையை வெளியிட்டனர் .வேறு தமிழ் பத்திரிகைகளில் தாயாக இந்திய நாடுகளில் வரும் முக்கிய செய்திகள் கட்டுரைகளை வெட்டி பிரதி எடுத்து இணைத்தனர் . மிகுதியை தமது கை எழுத்து பிரதியாக எடுத்து சேர்த்தனர் .
புலம்பெயர் நட்டு செய்திகள் தகவல்கள்  பயனுள்ள கட்டுரைகள் எமகீல்லாம் அந்த வேளையில் தேவையான அம்சங்கள் வள தொடங்கியுள்ள இந்த நாடுகள் பற்றிய தகவலகள் என சிறப்பாக தொகுக்கப்பட்டு வெளிவந்த சஞ்சிகைகள் மனிதம் எனலாம் .மதம் ஒரு தடவையாக வெளிவந்த இந்த மனிதம் சஞ்சிகையை ஆசிரிய பீடத்தில் இருந்து அலங்கரித்தார் இ.சண்முகராசா .சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த மனிதம் வெளியானது பாராட்டத் தக்கதே