செல்லத்துரை சதானந்தன்
புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சதானந்தன் ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்தில் கற்றார் .எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த சதானந்தன் சுவிசின் பல மேடைகளில் ^^பாட்டிங் பாட்டிங் ^^ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை ஈழத்துக் கலைஞர்கள் கோமாளிகள் பாணியில் நடத்தி புகழ் பெற்றார் .சிறந்த உதைபந்தாட்ட வீரராக விளையாட்டுக் கழகங்களில் களமாடிக் கொண்டிருந்த காலம் அது.எமது தமிழ் மக்களை மேற்கு நாடுகளின் தரத்துக்கு சிறந்த விளையாட்டு வீரர்கள் ஆக்கச் சரியான வழி எதுவென சிந்திக்கலானார் .அதன் பிரகாரம் சிறுவயதில் இருந்து படிப்படியாக முறையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ரீதியில் லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகத்தை உருவாக்கி பல வயதுப் பிரிவுகளிலும் வீரர்களை உள்வாங்கி பயிற்ருவித்து சுற்று போட்டிகளை சந்திக்க செய்தார் இதிலே பெரும் வெற்றிக ளைக் கண்டார் .சுவித்சர்லாந்தில்யே அதிக சாதனைகளை படைத்து அதிகூடிய வெற்றிக் கிண்ணங்களை பெற்று வருகிற ஒரு கழகம் இதுவாகும் .முக்கியமாக புங்குடுதீவு மண்ணை சேர்ந்த வீரர்களை பெரும்பாலும் உள்ளடக்கிய கழகம் இதுவேயாகும் .பல அமைப்புகளுடன் இணைந்து விளையாட்டுத் துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார் .அத்தோடு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திலும் தன்னை இணைத்து கொண்டு இன்று வரை அறிய பல பணிகளை செய்ய உறுதுணையாக இருந்துள்ளார் .மேலும்ஐரோப்பாவின் இயந்திரமாய
வாழ்க்கைக்கு மத்தியில் இசைக்குழுக்களை நடத்துவது கஷ்டமா என உணர்ந்து நவீன வடிவமான கரோக்கோ இசைக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார். சுவி மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் இசை நிகழ்சிகளை நடத்தி புகழோடு விளங்கும் இவரது சுவிஸ் ராகம் இசைக்குழு பெரும்பாலான தாயாக பணிகளுக்கென நிதிப் பங்களிப்பையும் செய்து வருகிறது.இந்த இசைக் குழுவின் அறிவிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக