புதன், 28 செப்டம்பர், 2011

thirumathi (ராஜகோபால் )

பிரசன்னா  சாதுஜா (ராஜகோபால் )

புங்குடுதீவு பத்தாம் வட்ட்ரத்தை
பிறப்பிடமாக கொண்ட பிரசன்னா  சாதுஜா   (ராஜகோபால் ) கொக்குவிலில் ஆரம்பகல்வியை கற்ற பொது இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தார் .அங்கே சில ஆண்டுகள் ஆங்கில மூலக் கல்வி கற்ற பின்னர் சுவிசுக்கு புலம் பெயர்ந்து உயர்கல்வியை கற்று தேறினார் .தாயகத்தில் இருந்த காலத்தில் முறைப்படி பரத நாட்டியத்தை சாந்தினி சுப்பையாவிடம் கற்று தொடன்ர்து இந்தியாவிலும் நாடிய கல்வியை தொடர்ந்திருந்தார் .சுவிசுக்கு வந்ததும் பரதக்கலையை வாணி நடராசாவிடம் கற்று பின்னர் திருக்கொநேச்வர நடனாலயத்தில் தொடர்ந்தார் .வெகு குறைவான் காலத்திலேயே பரத்தின் நுணுக்கங்களை எல்லாம் கற்றதனால் 1996இல் பெர்னில் தனது அரங்கேற்றத்தை மேடையேற்றினார் .   திருக்கொனேஸ்வரா நடனப்   பள்ளியின் முதல் வரிசை மாணவிகளின் பட்டியலில் இடம்பிடித்து உரிய காலத்தில் அரங்கேற்றத்தை செய்து கொண்டார்.இந்த நடனப் பள்ளியில் அரங்கேற்றம் செய்த இரண்டாவது மாணவி இவராவார்.அரன்கேற்றதுடன் நின்று விடாது பரதனாடிய ஆசிரிய உரித்துக்கான கல்வியை மேற்கொண்டு அதற்கான தகுதியை அடைந்த இவர் தொடர்ந்து தான்  கற்ற கல்வியை வீணாக்காது மற்றவரும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கோடு சுவிசில் பற்றாக்குறையாக உள்ள நடன ஆசிரியர்களின் குறை நீங்கு முகமகவும் தானே ஒரு  புதிய நடனப் பள்ளியை ஆரம்பித்து  ஏராளமான மாணவர்களுக்கு நடனக் கலையை  புகட்டி வருகிறார்.தனது பிறந்த ஊரின் குலதெய்வமாம் கண்ணகியின் பெயரிலே  கண்ணகை பரத கூடம் என்ற பெயரில்தனது பாடசாலையை அழகுற நாமம் இட்டுள்ளது குறிப்பிடத் தக்கது  புகழ் போதை  இல்லாத இந்த ஆசிரியை ௨௦௧௦ இல் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் வேரும் விழுதும் நிகழ்வை தனது மாணவர்களை கொண்டு தனது நாட்டிய கோலங்களால் அழகுற  செய்தார் .இந்த நிகழ்வில் இவரது மாணவர்களின் தசாவதாரம் நாட்டிய நாடகம் பார்வையாளர்களை மெய் மறக்க செய்திருந்தது .இவரில் மாணவர்கள் பலர் நாட்டிய மயில் போன்ற நடன விழ போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான பரிசில்களை பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக