Suresh Selvaratnam
சீற வேண்டிய நேரத்தில் சீறு.
ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு கொடுமையான நாகபாம்பு. வழியிலே யாரையும் செல்லவிடாது. அங்கு சென்ற பலரை தீண்டி கொண்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குருவந்தார். அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
அவரை தீண்ட அந்த நாகம் வந்தது. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய். கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய். அதில் என்ன பயன்.." என கூறி அதற்கு தியானம் கற்றும் கொடுத்தார். அன்றில் இருந்து அந்த நாகம் தியானம் செய்ய தொடங்கியது..!
யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து.. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுத்தாத தன்மை அடைந்ததால் "நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்" என்றது.. "அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு.." என கேட்டார்.. உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
"உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே..! சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல.., நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய்.. நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள்.." என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.
(ஆம்..! நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்காக எரிந்து விழுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் வழியில் எருமை மாடு குறுக்கே படுத்திருந்தால் விரட்ட சத்தமிடதான் வேண்டும். ஆனால் அந்த சத்தத்தை மகிழ்ச்சியாக செய்யலாமே