வியாழன், 6 அக்டோபர், 2011

 vanathi thesungurajah
 kamal - ravindran
 thankarasa (mathi)
 sathuja prasanna (ponnaadai porthu kaouravikkapadupavar ) valam
 srithas


 selvakumar  kones


புதன், 5 அக்டோபர், 2011

மானா வெள்ளை ,
வல்லன் ,சந்தையடி நுணுக்கள் குறிகட்டுவான் போன்ற இடங்களில் பந்தாடினார்.மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

madathuveli sanasamooka nilaiyam

மடத்துவெளி

சிவராசா ஸ்ரீ சஜிதா
(நாடு கடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினர் )

ஸ்ரீ சஜிதா புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வீரகத்தி சிவராசாவின் புதல்வியாவார் .சுவிட்சர்லாந்த் செங்காலன் நகரில் வசித்து வரும் இவர் தனது உயர்கல்வியை கற்றுக்கொண்டு தமிழினத்தின் விடுதைலைக்காக ஏராளமான செயலபாடுகளில்  தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார் .இளைஞர் அமைப்பில் இணைந்து  எமது இனத்தின் விடிவுக்காக பல திட்டங்களை முறைப்படி ஒழுங்கு படுத்தி செயலாக்கி வருகிறார்.தமிழ் ஜெர்மன் பிரஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிச்சயமான ஸ்ரீ சஜிதா மிக இளம் வயதிலே சமூக இன மொழி சேவை புரிய வந்திருப்பது பாராட்டுக்குரியதே .இளம் தலை முறைக்கு முன்னுதாரணமாக திகழும் இவர் கடந்த மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சங்க கூட்டத்தில் தமிழரின் விடிவுக்காய் ஆங்கில மொழியில் ஓங்கி ஒலித்த காட்சி எல்லா ஊடகங்களையும் அலங்கரித்தது  நினைவிருக்கும் .

புங்குடுதீவில் விளையாட்டு துறை


புங்குடுதீவில்  விளையாட்டு  துறை 
------------------------------------------------
சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் புங்குடுதீவு மண் விளையாடு துறையை கூட விட்டு வைக்கவில்லை .அந்த துறை சம்பந்தமாக ஓரளவு சொல்லும் விதமாக இந்த கட்டுரை   அ மைகின்றது  .புங்குட்தீவில் விளையாட்டு என்றதும் முதலி சொல்ல வேண்டிய ஒரு அமைப்பு சிவலைபிட்டி சன சமூக நிலையம் தான் என்பதில் யாரும் குறை சொல்ல மாடார்கள் .வருட பிரப்பென்ர்டஹு இந்த நிலையம் நடத்தும் சைக்கிலோட்ட போட்டி  மற்று மரதன் உட்பட்ட விளையாட்டு போட்டிகளின் நல என்பது எள்ளல புங்குடுதீவு மக்களுக்கும் நினைவுக்கு வரும் .சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த நாளில் இடைவிடாது கோலாகலமாக மாபெரும் விழாவாக இதனை நடத்தி வந்தவர்கள் சிவலைபிட்டி ச.ச.நிலையத்தினர் .   35மைல் சைக்கிலோட்ட போட்டி ௧௦10மைல் மரதனோட்டம் பெண்களுக்கான இதே போட்டிகள் மாட்டு வண்டி சவாரி போட்டி கரப்பந்தாட்டபோட்டிகள் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் என பகல் முழுவதும் நடத்தி இரவில் பரிசளிப்பு விழ நடத்தும் சிறப்பு பாராட்டப் பட வேண்டியது .நுணுக்க ல் வெளியில் இவர்கள் நடத்தும் மாடு வண்டி சவாரி போட்டிக்கென வட மாகாணம் முழுவதும் இருந்து வீரர்கள் வந்திருப்பார்கள் 
இந்த நிலையத்தினர் தினமும் மாலை வேளையில் கரப்பந்தாட்டம் ஆடுவது ஒரு அறிய உடற்ற்பயித்ர்ச்சி  முறையாகும் .இன்னும்சொல்ல போனால்  களம்  இவர்கள் இப்போது நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை போல சுற்றுப்போட்டிகள் லீக் முறை போட்டிகளை அப்போதே  அங்கெ நடத்தி கட்டிய வரலாறு படைத்திருகிறார்கள்.இவர்களது மைதானத்தில் வேறு கழகங்கள் வந்து விளையாடுவதும் இவர்கள் அங்கெல்லாம் போய் ஆடுவதுமாக இருந்த இந்த முறை இபோதைய மேற்கு நாட்டவ்ரின்முறை தானே .இவர்கள் சென்று ஆடியதும் அழைத்து ஆடியதுமான முக்கிய கழகங்கள் கரம்பொன் ,.பருத்தியடைப்பு, தம்பாட்டி ,வேலணை , வேலனைத்துறை ,உடுப்பிட்டி இமையாணன் ,கரவெட்டி, அச்சுவேலி என்ற வரிசையில் சொல்லி கொண்டே போகலாம் .பல சுற்று போட்டிகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்கள் வீரர்க  ள் வரிசையில் சிவலிங்கம் (அம்மான் ),சின்னராச தங்கராசா ,பிள்ளை நாயகம் , சண்முகலிங்கம், ஸ்ரீதரன் ,தயாபரன் பாலசுப்ரமணியம், அருள் போன்றோரும் சிறந்து விளங்கினார்கள் .சைக்கிலோட்ட போட்டிகளில்ரஞ்சன்  ,மகான் ,கேதான் ,செல்வேந்திர ராசா   போன்ற வீர்களும் பெண்கள் வரிசையில் கௌசல்யா, உதயா போன்ற வீராங்கனைகளும் புகழ் பெற்று விளங்கினார்கள் .
இவர்களை போன்றே தைப்பொங்கல்  நாளில் இருபிட்டி சன சமூக நிலையத்தினர் சைக்கிலோட்ட போட்டிகளை மற்றும் கரப்பந்தாட போட்டிகளை நடத்தி மகிழ்வித்தார்கள் .இவர்களும் சங்கரதாஸ் போன்ற சிறந்த வீரகளை கொண்டு அணி அமைத்து இருந்தார்கள் .அடுத்து மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் புங்குடுதீவில் சிறந்த விளையாட்டுத்துறையை வளர்த்தெடுத்தனர். இவர்களும் மாலை neரத்தில் கரப்பந்தாட்டம் உதபந்தாட்டம் என இரண்டிலும் சிறந்து விளங்கினார்கள் .எண்பதுகளின் ஆரம்பத்தில் தீவுப்பகுதியிலே சிறந்த உதைபந்தாட்டக் கழகமாக தெரிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது மேலும் நாசரேத் உதைபந்தாட்டக் கழகம் அண்மையில் தீவுப்பகுதி சாம்பியனாகி வடமகனதிலும் பல சாதனைகளை படைத்துள்ளது .புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உதைபந்தாட்ட அணியும் வலைபந்தட்ட பெண்கள் அணியும் உன்னத சாதனைகளை செய்துள்ளது மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி

அமரர் கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி 

கொழும்பு மாநகரில் பிரபலமான பொலிஸ்
அதிகாரி புண்ணிய மூர்த்தி மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார் என்ற செய்தி புங்குட்தீவை மட்டும் அல்ல அகில இலங்கையையுமே உலுப்பி எடுத்தது எழுபதுகளில் ஒரு நாளில்.புங்குட்தீவு எட்டம் வட்டாரத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி கமலாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து தொழில் கல்வியை காவல் துறை பாடசாலையிலும் கற்று சாதாரண காவல்துறை  உத்தியோக்கதரானர் .சில ஆண்டுகளிலேயே இவரது தொழில் திறமை வல்லமை ஆளுமை வீர சாகசங்கள  உயர் பதவிக்கு அழைத்துச் சென்றது .அந்த வகையில் காவல்துறை பொறுப்பதிகாரியாக கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி பதவி உயர்ந்தார்.இவரது சொந்த மைத்துனி விக்க்னேஸ்வரியை நிச்சயம் செய்ய எண்ணி இருந்த வேளையில் ஒரு இரவு தொடங்கும் வேளையில் இவர் ஒட்டி சென்ற மோட்டர் சைக்கிள்  (ஈ ரூந்துமோட்டார்  ) வெள்ளவத்தை பகுதியில்

கட்டுப்பட்டஈழந்து ஒரு தந்திகம்ப்பதுடன் மோதுண்ட பொது இவர் ஸ்தலத்திலேயே காலமானார் .இவரது நிச்சயிக்கப்பட்ட மத்துநியானவர் இவரது சகோதரன் லட்சுமணனை மனது தற்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார் .புங்குடுதீவு மடத்துவெளி மண்ணுக்கு கிடைத்த அற்புதமான காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி இப்போது எம்மிடம் இல்லை 
கதிர்காமு  சண்முகராசா (சண் .ரவி )
-----------------------------------
இன்றைய இணைய உலகின்
நவீனத்துவத்தின் கதாநாயகர்களில் இ வரும் ஒருவர் தமிழ் ஊடகங்களில் கோலோச்சும் இணைய வரிசையில் முன்வரிசை இடம் எடுத்துள்ள எமது தாய் மண்ணின் படைப்பாளியின் கைவண்ணம் மை கதிரவன் எனபது எல்லோரும் அறிந்ததே .ஆமாம் .புங்குட்தீவு3 ஆம் வட்டாரத்தை சேர்ந்தகதிர்காமு சண்முகராசா சுப்பிரமணிய வித்தியாலயத்தில் ஆரம்பக் கலவியையும் உயர்கல்வியை மக வித்தியலயதிலும் கற்று எண்பதுகளின் பின்பகுதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்தார் .இளைஞனாக வந்த சண்முகராசா தனது தாயாக விடுதலை போருக்கான பங்கை செலுத்தும் எண்ணத்துடன் அந்த செயல்பாடுகளில் தன்னை இணைத்து கொண்டார்.நீண்ட காலமாக தாயாக பணிகளில் ஈடுபாடு கொண்ட சண்-ரவி
காப்புறுதி வங்கி செயல்பாடுகளை கற்றுதேறி தனியே அவை சம்பந்தமான நிறுவனம் ஒன்றை நிறுவி  செயல் படுத்தி வருகிறார்.பின்னாளில் நவீன ஊடகத்துறையான இணையதளத்தின் உன்னத உயர்ந்த பரந்த செயல்பாட்டின் உச்ச பலன் பற்றி விளங்கி கொண்டவராக அதன் பால் ஈர்க்கப்பட்டு தமிழினத்துக்கு செய்கின்ற ஒரு சேவையாக எமது இனத்தை எழுச்சி கொள்ள வைக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தும் நல நோக்கில் மை கதிரவன் என்ற இணையத்தை ஆரம்பித்தார் .ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பித்து  பின் தேவை கருதி ஜனரஞ்சகமான ஒரு பாரிய இணைய தளமாக அதனை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறார் .தமிழனுக்கு தேவையான அத்தனை அம்சங்களை ஒருமித்து உள்ளடக்கிய ஒரு தளமாக மாற்றி புரட்சி செய்துள்ளார் சண்-ரவி அவர்கள் .எந்த வித வர்த்தக நோக்கமும் இன்றி சாதரணமாக  நடத்தி வருகின்ற இந்த இணையதளத்தின் பார்வையாளர்களின் தொகை நாளுக்கு நாள் பெருகி வருவது இவரது உழைப்புக்கு கிடைத்த உன்னத பலனாகும்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயல் பாடுகளிலும்  கணிசமான பங்களிப்பை  செ ய்து வருகிறார் சண்-ரவி  www. mykathiravan  .com    
சண்முகலிங்கம்  சாயி 

புங்குடுதீவு 12ஆம் வட்டரைத்த
சேர்ந்த பிரபல சங்கீத வித்துவான் ஆசிரிய சண்முகலிங்கத்தின் புத்திரனான சாயி  அவர்கள் எண்பதுகளின் ஆரம்பத்தில் சுவிசுக்கு புலம் பெயர்ந்துள்ளார் .இவர் சுவிட்சர்லாந்தில் கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார் .முக்கியமாக நாடகத்துறையில் தனது பலதரப்பட்ட நடிப்பாற்றலால் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார் .புங்கையூர் எஸ் ரமணனின் அல்ப்ஸ் அரங்காடிகள் மற்றும் சு வி கலைக்கூடம் என்பவற்றின் நாடகங்கள் அனைத்திலும் நடித்து உள்ளார் .பெண் வேடமிட்டு மேடையில் புகுந்தால் ரசிகர்களை கொள்ளை கொள்ளுமஇவரது நடிப்பு இவருடைய முத்திரையாகும் 
 இக்கு அக்கு பச்சை ,வீடில வில்லங்கம் ,என் ஏராளமான ரமணனின் இயக்கத்தில் உருவான நாடகங்கள் அனைத்திலு இவருக்கு ஒரு  முக்கிய பாத்திரம் இருக்கும்  .அந்த ஆல மரத்தடியில் என்ற நாடகத்தில் இவர் ஏற்ற அருந்தவம் பாத்திரத்தில் புங்குட்தீவு க்கு செல்லும் வெளிநாட்டு மோகம் கொண்ட ஒரு இளைஞனின் துடிப்பு அப்படியே அச்சொட்டாக பொருந்தியது எனலாம்.மேடையில் இவர் தோன்றும் ஒவ்வெரு காட்சியும் ரசிகர்களை  சிரிப்பில்  குலுங்க வைக்கும் அற்புதங்கள் .எந்த ஒரு பாத்திரத்தை கொடுத்தாலும் யதார்த்தமாக பத்திரமாகவே மாறிவிடும் தன்மை கொண்டவர். அந்த ஆல மரத்தடியில் நாடகத்தில் இவர் வழமைக்கு மாறாக சில காட்சிகளில் சோகமாக நடிக்கும் விதமாக அமைக்கப்டடிருந்த போதும் அதையும் இவர் ஒரு கை பார்த்து மக்களை கவர்ந்திருந்தார் 

புஷ்பா தர்மலிங்கம்


 பின்வரிசையில் இருப்பவர்களில் தர்மபலனுக்கு அடுத்து இடம் இருந்து மூன்றவதாக இருப்பவர் புஷ்பா 

வானதி தேசிங்குராஜா


கலாநிதி வானதி தேசிங்குராஜா 
-----------------------------------------------
ஜெர்மனி டில்லன்பேர்க் நகரில் வசித்து வரும் திருமதி வானதி அவர்கள் ஐரோப்பாவின் சிறந்த பிரபல நடன ஆசிரியை ஆவார் .யாழ்ப்பாணத்தில் பிரபலமான புகைப்படக் கலைஞர் இலங்கேஸ்வரனின் புத்திரியான இவர் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் புங்குட்தீவை புகுந்த இடமாகவும் கொண்டவர்.தனது உயர்கல்வியோடு நடனத்தை முறைப்படி யாழ்ப்பணத்தில் பிரபல நடனதாரகை திருமதி லீலா ஆறுமுகையா (நாராயணன் )அவர்களிடம் கற்று தேறிய பின் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்07. 05.1977 இல்தனது அரங்கேற்றத்தை  வெகுசிறப்பாக நடத்தினார் .தொடர்ந்து பல நடனப்பள்ளியை  நடத்திய பின்னர்09. 02.1983இல் .புங்குடுதீவு நாலாம் வட்டரம வேலாயுதம் தேசிங்குராஜாவை மணமுடித்து ஜே ர்மனிக்கு 1984இல் புலம்பெயர்ந்தார் .ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்த வானதி வானதி நர்த்தனாலயத்தை ஆரம்பித்து பல நகரங்களிலும் சிரமப்பட்டு பயணம் செய்து கற்பித்து வந்தார் .தனது ஒரே மகளான தமிளிநியையும் தனது வழியிலேயே வழிகாட்டி அவரையும் ஒன்பதாவது வயதில் அரங்கேற்றம் காண வைத்தார் .தற்போது வெள்ளிவிழ கண்டு பல மாணவர்களை நடனதர்ர கைகளாககி ஆலமரமாய் விரிந்து விழுதோடி நிற்கிறது இவரது நர்த்தனாலயம் 2011இல் இவரது வெள்ளி விழாவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.தாயக விடுதலை சம்பந்தமான விழாக்களுக்கு   எந்த வித எதிர்பர்ப்பும்  இ ல்லாமல் தனது நடன நிகழ்ச்சிகளை வழங்கி எமது மண்ணுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.ஜெர்மனி மட்டுமல்லாது ஐரோப்பா கனடா  போன்ற நாடுகளிலும் தனது ஆழ்ந்த திறமை வெளிப்பாடுகளை காட்டி வருகிறார்.குறிப்பாக சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் வேரும் விழுதும் விழாவில் இவரது நர்த்தகிகளின் நாட்டிய  வித்தகம் மக்களை கிறுகிறுக்க வைத்தது .இதுவரை 52 மாணவிகளை அரங்கேற்றம் ஏற வைத்து சாதனை படைத்து தலை நிமிர்ந்து நிற்கிறார் இந்த நடனமாது .இவருக்கு கிடைத்த விருதுகள் 


  -1979-நாட்டிய  தாரகை -வீரசிங்கம் மண்டபம் .யாழ் தொலைதொடர்பு    ஸ்தாபனம்
-13 -10௦-1996-நாட்டிய  ஆச்சார்யாமணி -வானதி நர்தானால்ய 10வது ஆண்டு விழ -சீர்காழி சி  வசிதம்பரம் 
-11-07-1998-ஈழத்தேசியவாணி -லண்டன் நாடியாலயம் அதிபர்.ராகினி ராஜகோபால் 
-24-03-2001கலைசுடர் -வானதி நர்தானாலயம் 15வது ஆண்டு விழா  லீலா அறுமுகையா
-15-12-2001-நிருத்தனகளைமாமணி  சர்வதேச இந்து மத சங்கம் 
-02-03-2002பரதமாதேவி - கவிஞர் கந்தவனம் 
-21-072002-கனேடிய அரச விருது-கனடா அரசு 
-27-5-202-கலை எழில் நர்ஹ்தகி-கனடா இளம் கலைஞர்  மன்றம்
-21-07-2002-நாட்டியக் கலாமணி -சர்வதேச இந்து மத குருபீடம் 
-2004---கௌரவ கலாநிதி .உலகப் பல்கலைக்கழகம்  
வல்லிபுரம் நல்லையா (இராமச்சந்திரன்)
------------------------------------------------------ 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக  கொண்டமடத்துவெளி பிரபல வர்த்தகர் வல்லிபுரம் (தங்கம்மா ) அவர்
களின் புத்திரனான  இராமச்சந்திரன் கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றபின்னர் சிறிது காலம் சொந்த ஊரிலேயே வர்த்தக்கதில் ஈடுபட்டு பின்னர் புங்குட்தீவு கிராமசபை வரி அறவீட்டு உத்தியோக்கதராக பணியாற்றினார் .இளமைக்காலத்தில் இருந்தே சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இராமச்சந்திரன் கட்டிடக் களைய சுயமாக கற்று தனது வியாபார நிறுவனத்தை சொந்தமாக நிர்மாணித்து சந்திரகிரி என் நாமம்  இட்டு மகிழ்ந்தார் .ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு மடத்து வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தில் பங்கு பற்றி பல ஆண்டுகளாக அந்த ஆலயத்தின் தொண்டில் தன்னை அர்ப்பணித்தார் அத்தோடு கடற்கரை தூண்டி ஞான வைரவர் ஆலயதையும்மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டி கும்பாபிசேகம் செய்து வைத்தார் .இந்த ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை கஞ்ச ஊற்றும் சிறப்பான விழாவினை சித்திரா பௌர்ணமியில் நடாத்தி வந்தார் .வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த ஒரு நாள் தைப்பொங்கல் விழாவிலும் இவரது பாரிய பங்களிப்பு இருந்து வந்தது .எல்லாவற்றுக்கும் மேலாக அறுபதுகளின் பின்பகுதியில் தமிழனத்தின் தேசிய அடையாளமாக திகழ்ந்த தமிழரசுக் கட்சியின் பிராந்திய அமைப்பாளராக பொறுப்பேற்று அந்த கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட்டர்.எழுபது தேர்தலில் இவரது உழைப்பு இந்த பகுதியில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது .இந்த தேர்தலுக்கு முதல் நாளில் நடைபெற்ற பெருங்காடு முதல் வேலணை மத்திய கல்லூரி வரையிலான சிறப்பான வாகன பேரணியின் ஏற்பாட்டுக்கு க.திருநாவுக்கரசு ,சந்திரன் சிவநாமம் போன்றோருடன் இணைந்து ஒழுங்கு படுத்திய முறை பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது .கமலம்பிகைபலைய மாணவர் சங்கத்தினதும் ஆரம்ப கர்த்தாக்களில் ஐவரும் ஒருவர் .

எஸ் .சிவநேசன் (பிரசன்னா

எஸ் .சிவநேசன்  (பிரசன்னா ) 
புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை
சேர்ந்த சிவநேசன் சுப்பிரமணிய வித்தியாலயம் மகாவித்தியாலயம்  என்பவற்றி கல்வி கற்ற பின்னர் சிறிது காலம் பெருங்காடு சந்தியில் வர்த்தக நிறுவனத்தை நடத்திய பின்னர்  சுவிசுக்கு புலம பெயர்ந்து செங் காலன் மாநிலத்தில் வசித்து வருகிறார்.சுவிசில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிராந்திய பொறுப்பாளராக செயல் பட்டு வரும் சிவநேசன் புங்குடுதீவு மண்ணுக்கு சேவை செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.கூடுதல் நேரங்களில் தனது பிறந்த ஊர் பற்றியே  சிந்தித்து அதற்கான செயல் திட்டங்களை பற்றி பேசி வரும் இவர் சுவிசிலும் வர்த்தகத்தில் ஈடுபட் தொடங்கினார் .அவர் வசிக்கும்  பிரதேசத்தில் ஆசிய மளிகை நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறார். தாயக  உதவிகளை  வேண்டிய அளவுக்கு  செய்து உள்ளார். புங்குடுதீவில்  பிரபல சைக்கிலோட்ட வீராங்கனை உதயவினை மணமுடித்து  இனிதே வாழ்ந்து வருகிறார் 

1சத்தியநாதன் ரமணதாஸ்

சத்தியநாதன் ரமணதாஸ்
ஈழத்தின்  மாவட்டத்தின் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட ரமணன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமானிய மகா

வித்தியாலயத்திலும் உயர்கல்வியை புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் கற்றார் .மிக இளம் வயதில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த இவர் மேலதிக கல்வியை சுவிசில் பெற்ற பின்னர் இசையில் நாட்டம் கொண்டு வயலின் இசைக்கருவியை முறைப்படி கற்று தேறினார் .பின்னர் கலைத்துறைக்குள் புகுந்து பல சாதனைகளை புரட்டி போட்டார் .நாடக கலையை அறிந்து தெரிந்து கொள்ள அவா கொண்டு புறப்பட்டவர் இன்று சுவிசில் மட்டுமல்ல ஐரோப்பா எங்கணும் சிறந்த நாடக வாதி என்ற முத்திரையை பதித்துள்ளார் .பழைய தமிழ் நாடக முறைமைகளை மாற்றி புரட்சி செய்தார்.மேற்கத்தைய நவீன நாடகவியலை முறைப்படி  கற்க ஆரம்பித்தார்,காட்சிப்படுத்தல் ,ஒப்பனை மேம்படுத்தல் ,மேடை அலங்காரம் ,எளிமையான வழிமுறைகள் ,பின்னணி இசைப்படுத்தல் .நவீன ஒளி அசைவு தோற்றுவாய் ,என் அத்தனை புதுமைகளையும் புகுத்தி தமிழ் நாடக உலகை மேம்படுத்தினார்.இவற்றுக்கு துணையாக நடக்க காவலர் தாசியஸ் அன்டன் பொன்ராஜ் பாஸ்கரன் போன்றோரை ஒருங்கிணைத்து நாடகப் பாசறைகளை ஏற்படுத்தினார் அங்கே  பல புதிய நடிகர்களை  உள்வாங்கி  பயிற்சி பட்டறைகளில் மெருகேற்றினார்.அத்தோடு நாட்டு கூத்து.ஓரங்க நாடகம் ,இசைவழி நாடகம் தெருவழி நாடகம் என பலவகை கலைப்படைப்புகளை பிரசவித்தார்.ஜெனீவ ஐ நா  சபை முன்றல்பேரணிகள்  போன்ற தாயக நிகழ்வுகளை தனது தமிழுணர்வு மிக்க படைப்புக்களால்  காலத்துக்கேற்ற கலை வெளிப்பாடுகளினால் எழுச்சிப் படுத்தினார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு  ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக நீண்ட  காலம் செயல் படும் ரமணன் அதன் நிகழ்வுகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்ற முன்னின்றவர் .ஒன்றியத்தின் மேடைகளிலும் பண்டாரவன்னியன் என்ற சரித்திர நாடகத்தையும் அந்த ஆல மரத்தடியில் என்ற இலட்சிய நாடகத்தையும் அரங்கேற்றினார்புங்கைய்யூர் எஸ் ரமணன் என்னும் புனைபெயரில் இவரது நாடகங்கள் ஏராளம்  ஐரோப்பா எங்கணும் மேடையேறி உள்ளன முக்கியமாக மேட் இன் ஸ்ரீலங்கா .இக்கு அக்கு பச்சை போன்றவை குறிப்பிடத்தக்கன.குறும்பட முழு திரைப்பட தயாரிப்பு  இயக்கம் நடிப்பு என்பவற்றிலும் உள் நுழைந்த ரமணன் பூப்பெய்தும் காலம் என்னும் சிறந்த திரைப்படத்தை உருவாக்கி இருந்தார் .இன்னும் தமிழக  திரைப்படமான அஜித்தின் அசல் என்ற படத்திலும் நடித்துள்ளார் .பல நடிகர்களை இவர் பட்டை தீட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர்.இவரது செவ்விகள் படைப்புகளை ஒலிபரப்பாத  ஒளிபரப்பாத  எழுதாத தொலக்காட்சிகள் வானொலிகள் ஊடகங்கள் இல்லை எனலாம்
இவர் நடித்து அல்லது இயக்கி மேடையேறிய படைப்புகள் 
நாடகங்கள் 
-------------------
மேட் இன் ஸ்ரீலங்கா 
சீர்கேடுகள் 
வீட்டில வில்லங்கம் 
இக்கு அக்கு பச்சை 
வெளிக்கிடடி மீனாட்சி 
பெத்தாலும் பெத்தேனடா 
நான் ஒரு கரப்பான் பூச்சி 
பண்டார  வன்னியன்   
அம்மையே அப்பா 
கடலம்மா 


மலையம்மா 
எரிமலை பூக்கள்
வில்லுப்பாட்டு
அந்த ஆல மரத்தடியிலே 
---------------------
புத்திமான் பலமாவான் 
சுவிஸ் திரைப்படம்
-------------------------- 
டாரியோ எம் 
மாட்லி இன் லவ் 
டெலிட்ராமா
--------------------
வணக்கம் 
சுவிஸ் தொலக்காட்சி விவரணப்படம் 
-----------------------------------------------------
இன்றைய ஈழம்  எஸ் எப் 1 தொலைக்காட்சி 


 நாட்டுக்கூத்துகள் 
வீரன் வில்லியம்ஸ் தெல்
காத்தவராயன் 

குறும்படங்கள் 
முடிவல்ல 
பூப்பெய்தும் காலம் 
தமிழக திரைப்படம் 
அசல் (நடிகர்)
மன்மதன் அம்பு (தொழில் நுட்பம் )

திருமதி ரோகினி கேதீஸ்வரன்

திருமதி  ரோகினி கேதீஸ்வரன் 

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை
பிறப்பிடமாக கொண்ட சுப்பையா கணேசின் புத்திரியான ரோகினி கேதீஸ்வரனை கரம் பிடித்து தற்போது சுவிட்சர்லாந்து பேர்ன்       சுமிச்வால்டில் வாழ்ந்து வருகிறார் .ஆரம்பக் கல்வியை ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில்  ஆரம்பித்தவர் ஓராண்டின்   பின்னர்  யாழ்  வேம்படி  மகளிர்  கல்லூரியில் உயர்தரம் வரை கற்ற பின்னர் வட இலங்கை  சங்கீத சபை பரீட்சையில் வாய்ப்பாட்டு சங்கீத பிரிவில் தேர்ச்சி பெற்று உயர்ந்தார்.இதனை தொடர்ந்து யாழ் இராமநாதன் நுண்கலை கல்லூரியில் தனது படிப்பை மேற்கொண்டார் .இவர் பிரபல சங்கீத வித்துவான் பத்மலிங்கம் ஆவர்களிடம் முறைப்படி  சங்கீதத்தை கற்ற பின்னர் எமது மண்ணின் மூத்த கலைஞர்  . பிரபல சங்கீத பூசணம்  பொன்-சுந்தரலிங்கத்திடம்  கற்று தேறிய இவர் தனது கலை ஞானத்தை மட்டவர்களுக்கும்அறிய வைக்கு உயரிய நோக்கில்   சங்கீத வகுப்புகளை நடத்தி ஏராளமான மாணவர்களை சங்கீதத்தில் சிறந்தோங்க வழி செய்துள்ளார் சுவிஸ் லங்கந்தால் நகரில் சாயி மதுர கலை மன்றம் என்ற பாடசாலையை ஆரம்பித்து இங்கே மாணவர்களுக்கு பயிர்டுவிது வருகிறார் .இவரது புதல்வி சைந்தவி கூட இவரது மாணவி யாக பயின்று 2009இல் நடைபெற்ற இசைக்குயில் என்ற மாபெரும் விருதை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது. மேலும் இவரது மாணவர்கள் பலரும் பலவகையான போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான விருதுகளையும் சாதனைகளையும் பெற்று வருவது இவருக்கு பெருமை சேர்க்கும் விடயம் அஆகும் 

இராசதுரை ஞானசேகரம்

இராசதுரை  ஞானசேகரம் 

புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த
இராசதுரை ஞானசேகரம் கமாலம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கலவியை கற்ற பின்னர் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியை பெற்றார் .இளமைக் காலத்தில் இருந்தே  மடத்துவெளி பால சுப்ர மணியர் கோவிலின் வழிபாட்டு மன்றத்தின் ஓதுவாராக இருந்து அரிய தொண்டு செய்த ஒருவர். புங்குடு தீவு மண்ணிலேயே கூட்டுபிரார்த்தனைக்கு பெயர் போன மடத்துவெளி முருகன் கோவிலின் சிறந்த பணியாளர்.மக வித்தியாலயத்தில் சங்கீதத்தை முறைப்படி கற்ற ஞான சேகரம் தனது குழுவினரோடு அன்னைப்பத்து அச்சோப்  பதிகம்,நமச்சிவாயப் பதிகம் ,பஜனை நாமாவளிகள் ,திருப்புகழ் ,பஞ்ச புராணம் என்  எல்லாவற்றுக்கும் சல்லாரி சப்லா கட்டை  என்பவற்றை ஒவ்வொரு விதமாக தாளமிட வைத்து கூட்டு பிரார்த்தனை செய்கின்ற காட்சியே அலாதியானது .  பாணாவிடை சிவன் கோவில் .பெருங்காடு முத்து மாரியம்மன் கோவில் என்பவற்றின் திருவிழா காலங்களிலும் அவற்றில் பங்கேற்றி மெருகூட்டுவார்.  மடத்து வெளி முருகன் கோவில் திருவெம்பாவை காலங்கள் பக்தி மார்க்கத்துக்கு முத்திரை பதித்தவை .அதிகாலையில் எழுந்து நீராடி இவரது வழிகாட்டியான முதல்வர் திரு க.அம்ப்லாவனருடன் இணைந்து ஆலயம் சென்று திருப்பள்ளி எழுச்சி  அருளி பின்னர் கிராமந்தோறும் சங்கு சேமக்கல வீதி வல ஓதல் செய்து மீண்டும் ஆலயத்தில் திருவெம்பாவை விழாவை முடித்து வைக்கும் பணிகளில் முழுமையாக ஈடு அப்டுத்திகொண்டவர் .சுவில் கூட இவர் எல்லா ஆலயங்களிலும் இதே பணியை புரிந்து வருகின்றார் .முக்கியமாக இவர் திருவில காலத்தில் ஊஞ்சல் பாடல்களை நாதஸ்வர இசைக்கு இணையாக  பாடுவது பக்தர்களை பரவசப் படுத்தும் 

இ .இராசமாணிக்கம்


இ .இராசமாணிக்கம் 1
புங்குடுதீவு 8 aam
வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட  புரோக்கர் என்று செல்லமாக அழைக்கப் படும் இராசமாணிக்கம் ஒரு அற்புதமான இசை நாடக கலைஞன் .எண்பதுகளின் இறுதியில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த இராசமாணிக்கம் இளைஞனாக  இருந்த காலம் தொட்டே இசையில் ஆர்வம் கொண்டு காணப்பட்டார் .கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் இவரது உறவினராகிய போ.கந்தசாமி  மற்றும் மகேஸ்வரன் (மலைப்பாம்பு ) ஆகியோருடன் இணைந்து மடத்துவெளி வீரத்தி விநாயகர் ஆலயத்த்தின் ஒரு நாள் தைப்பொங்கல்  விழாவில் விடிய விடிய இசைக் கச்சேரியை செய்து வந்த  பெருமைக்குரியவர் .அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை பழைய மனவர்சங்கத்தை உருவாக்கி செயலாற்றினார் . அதே கால ப்பகுதியில் சில விழாக்களை நடாத்தி அதிலே நாடகங்களை நடத்தி புகழ் பெற்றவர்.பின்னர் யாழ்ப்பான பகுதிகளிலே பிரபலமான ரங்கன் இசைக்குழுவில் இணைந்து சிறந்த இசைக்க்லைஞனாகவும் மிளிர்ந்தார் .அந்த காலத்திலே பிரபலமான ரங்கன் இரட்டையர்கள் கண்ணன் இசைக்குழுக்களில் பல்வேறு வாத்தியக் கலைஞனாகவும் புகழ் பெற்ற இவர் எழுபதுகளில் மடத்துவெளி சனசமூக நிலையத்தின் எழுச்சிக்கு முக்கிய காரண கர்த்தவானார் .சன சமூக நிலையத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டியதோடு அதன் வசிக்க சாலையின் பொறுப்பாளராக கால் நூற்றாண்டு காலமாக  பணி புரிந்தார் .இந்த

காலத்தில்  வாசிக சாலைய காலை ஒன்பது மணிக்கு திறந்து சுத்தம் செய்து பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஐ ஒழுங்கு படுத்தி வைத்து விட்டு  பின்னர் மாலை எழு மணிக்கு மூடி விட்டு செல்லும் வழக்கத்தை எந்த வித சம்பளமும் இன்றி புரிந்த மகத்தான மனிதர்.மடத்து வெளி சன சமூக நிலையத்தின் மலரவில் நாடக கலா மன்றத்தின் அனைத்து நாடகங்களிலும் சிறந்த குணா சித்திர பாத்திரங்களில் நடித்து பெருமை பெற்றவர்.இந்த வரிசையில் அந்தஸ்து நாடகத்தில் புரோக்கராக நடித்த காரணத்தால் புரோக்கர் ஐயா என்ற செல்லபெயரே இவருக்கு வழங்கல் ஆயிற்று . தகப்பன் பாத்திரம்ம் ஏற்று இவர் நடித்த அத்தனை நாடகங்களும் நகைச்சுவை ,குண சித்திரம், தத்துவம்,சிந்தனை,குடும்ப பாங்கு,பாச வெளிப்பாடுகள் என ஒருங்கிணைந்து வெளிபடாகின. அந்தஸ்து ,காகித ஓடம்,செத்தவன் சாக இருப்பவனைச்  சாகடிப்பதா, மெழுகுவர்த்தி அணைகின்றது,கிராமத்து  அத்தியாயம்  ,பகலிலே யாழ்ப்பாணம் (கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம் )  என  இவரது நடிப்பில் உயர்ந்த நாடகங்களை பெயரிட்டு கொண்டே போகலாம் .நாடக ஒத்திகைக்கு தினமும் மாலையானதும் தனது மேன்டலின் இசைக்கருவியுடன் வந்து  களை   கட்ட 
வைக்கும் காட்சியே  அற்புதமாக  இருக்கும் . நகைச்சுவை ததும்ப இவர் நாடக வசனங்களை இயல்பாக கிராமத்து வழக்கிலேயே பேசும் போது சிறப்பான கட்டத்தை  அந்நாடகங்கள் அடையும்.இவரது வசன பாணி ஈழத்துக் கலைஞா அப்புக்குட்டி ராஜகோபாலை நினைவு படுத்தும் .இராசமாணிக்கம் ஆதி காலம் தொட்டே ஒரு சாயி பக்தர். மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்திலும் பங்கேற்று பணியாற்றி உள்ளார் .தமிழகத்தில் தற்போது வாழும் இவர்  அங்கேயும்  திருச்சி சத்யா சாயி பாபா வழிபாட்டு மன்றத்தில் பஜனை குழுவில் முக்கியஸ்தராக இசை கலைஞனாக இருந்து வருகிறார் 


டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.


டென்மார்க்கில் சுமார் 10.500 பேர்வரை தமிழ் மக்கள் வாழ்வதாக சமீபத்தய கணிப்புக்கள் கூறுகின்றன. இந்தச் சிறிய எண்ணிக்கைக்குள் ஒரு தேசத்திற்குரிய அடையாளங்கள் என்று என்னென்ன விடயங்கள் இருக்க வேண்டுமோ அத்தனை அம்சங்களையும் இலங்குவதைக் காணலாம். அந்தவகையில் கடந்த 25 வருடங்களாக டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.
டென்மார்க்கில் தமிழர்கள் குடியேறிய 25 வருட நினைவுகளின் ஓரங்கமாக இப்பேட்டிகள் தொடராக வெளிவருவது குறிப்பிடத்தக்கது..

வணக்கம் சிறீதரன் அவர்களே..
சிறீதரன் : வணக்கம்.

கேள்வி : முதலில் உங்களைப் பற்றியும், மறக்க முடியாத இளமைக்காலத்தைப் பற்றியும் ஒரு சிறிய முன்னோட்டத்தைத் தாருங்கள்.. ?

சிறீதரன் : உங்களுக்கு புங்குடுதீவை தெரிந்திருக்கும். ஆலயங்கள், திருவிழாக்கள், கலைவிழாக்கள் என்று எப்போதுமே கலையால் களைகட்டித் திகழும் அழகிய தீவு. அந்தப் புங்குடுதீவிற்குள் ஊரதீவு என்று இன்னொரு தீவு இருக்கிறது. இரண்டு பக்கங்கள் கடலாலும், இரண்டு பக்கங்கள் மழை நீராலும் சூழப்பட்ட, உப்பும், இனிப்பும் கலந்தெடுத்த சுந்தரத் தமிழ்க் காற்று தாலாட்டும் தீவு இந்த ஊரதீவு. இதுதான் நான் பிறந்து வளர்ந்த இடம்.

கேள்வி : உப்புக்கரிக்கும் நீர் இருபுறம், அள்ளிக் குடிக்கும் மழைநீர் மறுபுறமும் அமைவது இயற்கையின் இனிய காட்சியாகும்.. கேட்கச் சுகமாக இருக்கிறது.. சுவர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.. ம்..! மேலும் கூறுங்கள்.

சிறீதரன் : இந்தத் தீவைச் சுற்றி நிற்கும் ஏரியில் மாரி காலத்தில் நீர் இருக்கும், கோடை காலத்தில் வற்றிவிடும். கோடை காலத்தில் அந்த ஏரிப்பகுதி எமக்கு திறந்தவெளி கலையரங்கமாகவும் விளையாட்டரங்கமாகவும் திகழ்ந்தது. எனவே நமக்கு பாதிக்காலமும், நீருக்கு பாதிக்காலமுமாக அந்த நிலப்பகுதி மீது உரிமை கொண்டாடும் அரிய வாய்ப்பு இருந்தது. ஒருபக்கம் உப்பு, மறுபக்கம் இனிப்பு இரண்டுக்கும் நடுவே நாங்கள். அதுமட்டுமா அங்கே ஓர் அழகான சிவன் கோவில். அங்கிருக்கும் இறைவன் பாணாவிடை தான்தோன்றீஸ்வரராகும். அந்தக் கோயிலைச் சுற்றி சிறிய மலை, காடு, கடல், வயல், என நால்வகை நிலங்களும் சூழ்ந்து தெய்வீகமயமான ஒரு பகுதியாகக் காட்சிதரும். அங்கே நாம் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்தோம். இந்தியாவுடன் இலங்கை இணைந்திருந்த காலத்திலேயே இதன் சிறப்பும் பழமையும் துலங்கியிருக்க வேண்டும். ஒரு தீவை பன்னிரண்டு வட்டாரங்களாக பிரித்து, ஒரு வட்டாரத்திற்கு ஊரை என்று பெயர் வைக்கும் மரபு மிகத் தொன்மையான காலத்திற்குரியது, அந்தச் சிறப்பின் அடையாளமே நமது ஊரதீவு. இது பண்டைக்காலத்தில் தமிழகமும், இலங்கையும் இணைந்திருந்தமைக்கு ஓர் உதாரணமாகும்.

கேள்வி : புங்குடுதீவு உட்பட பொதுவாக தீவுப்பகுதியில் கல்வி நன்கு முன்னேறியிருக்கும். இலங்கையின் சிறந்த கல்வியியலாளர் பலரைத் தந்த பெருமை தீவுப்பகுதிக்கு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன ?

சிறீதரன் : தீவுப்பகுதி மக்கள் கல்வியில் முன்னேற வேண்டிய நெருக்குதலைத் தந்தது வரட்சி. இதன் காரணமாக வர்த்தகமே தீவுப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக இருந்தது. வர்த்தகத்தில் போதிய பணம் ஈட்டிய காரணத்தால் தங்கள் பிள்ளைகளை பிரபலமான பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைத்தார்கள் நம்பகுதி மக்கள். இதனால் கல்வி கற்ற சமுதாயம் ஒன்றை தடையின்றி உருவாக்க வழி பிறந்தது. வர்த்தகம், கல்வி இவை இரண்டும் நமது கண்களாகவே இருந்தன. தீவுப்பகுதிகள் கல்வியில் பாரிய முன்னேற்றம் காண இதுவே முக்கிய காரணமாகும்.

கேள்வி : நீங்கள் சிறந்த சமயச் சிந்தனையாளராக, பேச்சாளராக வருவதற்கு தூண்டுதலாக இருந்த பின்புலங்கள் எவை ?

சிறீதரன் : நமது ஊரதீவில் கிராமமுன்னேற்றச் சங்கம், சனசமூகநிலையம், மற்றும் புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் போன்றன இருந்து கலைகளை வளர்க்க அரும்பாடுபட்டன. புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் கலைவிழாக்களை நடாத்துவதில் பெரும் அக்கறை காட்டிவந்தது. ஏரியின் பக்கத்திலேயே அறிவகம் என்ற நூலகம் அமைந்துள்ளது. அக்காலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக அறிவகத்தில் இருந்தே ஒத்திகைகளை பார்ப்போம். அக்காலத்தே நான் நமது ஊரில் உள்ள திருநாவுக்கரசு வித்தியாலயம், புங்குடுதீவு மத்திய மகாவித்தியாலயம் போன்றவற்றில் படிக்கும்போது மேடைப்பேச்சில் வல்லவனாக வருதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். பிற்காலத்தில் இளந்தமிழர் மன்றத் தலைவராக இருந்தமையால் பல இடங்களுக்கும் சென்று பேச வாய்ப்பும் கிடைத்தது. எனவே நான் பேச்சாளராக வருவதற்கு வாழ்ந்த சூழல் ஒரு பிரதான காரணமாகும்.

கேள்வி : அதேவேளை உங்களுடைய பேச்சிலும், சிந்தனையிலும் அக்காலத்து தீவகப் பெருமக்கள் பலருடைய தாக்கம் தெரிகிறது..

சிறீதரன் : உண்மைதான், காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.கே. மகேந்திரன நமது தீவில் தமிழ் மணக்க முக்கியமாகப் பாடுபட்ட ஒருவராகும். நான் சிறுவனாக இருந்தபோது அவருடைய வழிகாட்டலில் எனது பேச்சுக்கலையை வளர்த்துக் கொண்டேன். சிறுவனாக இருந்தபோது பல கூட்டணி மேடைகளிலும் பேசியுள்ளேன். மேலும் ஈழத்தின் புகழ் பெற்ற படைப்பாளி ஆசிரியர் மு.தளையசிங்கம் அவர்களிடம் இரண்டு ஆண்டு காலம் படிப்பதற்கும் எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. சட்டத்தரணி எஸ்.கே. மகேந்திரன, ஆசிரியர் மு.தளையசிங்கம், கவிஞர் வில்வரத்தினம் போன்ற பலருடன் எனக்கு தொடர்பிருந்தது. தமீழத்தின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட மு.நவரத்தினம், தமிழறிஞர். கா.பொ.இரத்தினம், வீ.வீ.கே ஆறுமுகம் போன்றவர்கள் எல்லாம் தமிழ் வளர்த்த சூழலில் வளரக்கூடிய அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று நான் பல்வேறு துறைகளிலும் பேச்சுக்கலையை வளர்த்துக் கொள்ள இந்தப் பேராசான்களின் தொடர்பு முக்கிய காரணமாகும்.

கேள்வி : இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும், டென்மார்க்கில் இருந்து சமயப்பணிகளில் ஈடுபட்டவரும் மெய்ஞானக்குரல் என்ற நூலை வெளியிட்டவருமான காலஞ்சென்ற சித்ராமணாளன் நீங்கள் கூறும் எஸ்.கே. மகேந்திரனின் உறவினர், அவர் அழைத்தே சித்திராமணாளன் கனடா சென்றார்.. எஸ்.கே. மகேந்திரன் மாரடைப்பால் மரணித்த சில நாட்களில் இவரும் மரணமடைந்தார். ஒன்றாக இணையவும், ஒன்றாகவே உலகை விட்டுப்பிரியவும் நினைக்குமளவிற்கு அந்நியோன்னியமானவர்கள்.

சிறீதரன் : உண்மைதான் இருவருடைய பக்கம் பக்கமான மரணங்கள் பலருடைய உள்ளங்களைப் பாதித்தது தெரிந்ததே. மேலும் எஸ்.கே. மகேந்திரனிடம் நான் பெற்ற தாக்கம் சித்திரமணாளனிடமும் இருந்தது. அவரும் சிறந்த மேடைப்பேச்சாளர், வில்லுப்பாட்டு கலைஞர், நூல் வெளியீட்டாளர் என்று பல பாத்திரங்கள் வகித்தவர். அவர் எனது உறவினர்தான்.

கேள்வி : தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரனை பார்த்தசாரதியான கண்ணனின் அவதாரமென வர்ணித்து, நூல் எழுதி அதை எமக்கு தபாலில் அனுப்பியிருந்தார் சித்திராமணாளன். அதை நாம் பெற்றுக் கொண்ட அதே தினம் அவர் உயிரும் பிரிந்த செய்தி வந்தது. உயிர் கொடுத்து பிரபாகரனுக்காக நூல் எழுதிய உன்னதப் படைப்பாளி சித்திராமணாளன் என்பது பலருக்கு தெரியாது.

சிறீதரன் : உண்மைதன் சித்திராமணாளன் மேலும் அற்புதமாக பரிமளிக்க வேண்டிய கலைஞர் சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம் இன்றும் ஆற்ற முடியாத காயமே. எஸ்.கே. மகேந்திரனின் தாக்கம் கொண்ட கலைஞர்கள் வழியில் இடைவெளி ஏற்படாது என்னாலான பணிகளை நான் செய்துவருகிறேன்.

கேள்வி : இந்தப் பேச்சாளர்கள் தீவுப்பகுதிக்குள் மட்டும் அடங்கிப் போனவர்கள் அல்ல, பரந்துபட்ட ஞானம் உடையவர்கள்.. நீங்கள் எப்படி ?

சிறீதரன் : நான் தீவுப்பகுதியில் மட்டும் வாழ்ந்தவனல்ல யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் எல்லாம் பரந்துபட்டு வாழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு. தீவுக்குள் இருந்து டென்மார்க்வரை புலம் பெயர்ந்து வந்துள்ளேன், சகல இடங்களையும் சேர்ந்த மக்களுடன் நட்பாக வாழ இத்தகைய அனுபவமே எனக்கு துணையாக அமைந்தது. பொதுவாக தீவகத்தில் இருப்பவர்கள் தீவுக்குள் இருந்தாலும் கூட, வர்த்தகத்திற்காக இலங்கை முழுவதும் பரவியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கேள்வி : சரி டென்மார்க் வந்த பின்னர் உங்கள் கலைப்பணிகள் எவ்வாறு நகர்ந்தன..?

சிறீதரன் : 1987ம் ஆண்டு டெனிஸ் அகதிகள் உதவி சங்க ஆதரவில் ஓர்குஸ் நகரில் நடந்த பல்கலாசார விழாவில் நாடகம் ஒன்றைத் தயாரித்து மேடையேற்றினேன். எமது கலைத்திறனைக் கண்ட அதிகாரிகள் ஸ்கன்னபோ நகரிலும் ஒரு கலைவிழாவை நடத்தினார்கள். அதில் நான் நிகழ்த்திய சொற்பொழிவே டென்மார்க்கில் என்னை ஒரு பேச்சாளனாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து டென்மார்க்கிலுள்ள பல நகரங்களிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்த நான் பட்டிமன்றங்களையும் நிழ்த்த ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பட்டிமன்றப் பேச்சாளராகவும் பின்பு பட்டிமன்ற நடுவராகவும் பல பட்டிமன்றங்களை நிகழ்த்தியுள்ளேன்.

கேள்வி : தமிழ் மேடைப்பேச்சில் இருந்து ஆன்மீகத்திற்குள் எப்படி நுழைகிறீர்கள்.. ?

சிறீதரன் : தமிழ் மேடைப்பேச்சுக்களோடு நான் பிறந்து வளர்ந்த இடத்தின் பின்னணி காரணமாக சமயத்தில் ஈடுபாடு எனக்கு அதிகமாக இருந்தது. தமிழ்ப்பணியாளன் சைவத்தோடு இணையும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வெறும் மதப்பிரச்சாரமாகப் போய்விடக் கூடாது. மூட நம்பிக்கைகளை மதம் என்று கருதுவதும், அதனடிப்படையில் மதங்கள் மீது மலினமான விமர்சனங்களை வைப்பதும் எளிமையானது. எனவேதான் சைவத்தில் உள்ள சிறப்புக்களை மூட நம்பிக்கைகளை விலத்தி அடையாளம் காட்ட எனது பணி அவசியம் என்று உணர்ந்தேன். இந்து சமயம் என்பது ஒரு சமயமல்ல அது பல சமயங்களின் தொகுப்பு என்பதைப் புரிய வைக்குமாறு எனது உரைகளை வடிவமைத்தேன். மக்கள் மத்தியில் அது பெரிய வரவேற்பைப் பெறுவதையும் புரிந்து கொண்டேன்.

கேள்வி : தாங்களும் டென்மார்க்கின் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருக்கிறீர்கள். இதன்மூலம் தாங்கள் ஆற்றும் பணி யாது ?

சிறீதரன் : சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் முயற்சியுடன் சமய சம்மந்தமான, அறிவுபூர்வமான எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமெனப் பாடுபட்டு வருகிறோம். மேலும் நமது நகரை சுற்றி வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு எழுத, வாசிக்க, சமய அறிவுகளை போதிக்க நேரம் ஒதுக்கியுள்ளேன். தற்போது எனது தமிழ், சமய வகுப்புக்கள் ஸ்கனபோ நகரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கேள்வி : இனி பொதுவான பார்வைக்கு வருவோம்..டென்மார்க்கில் தமிழ் கலை, கலாச்சார வளர்ச்சிகள் பற்றிய தங்களின் பார்வை என்ன ?

சிறீதரன் : டென்மார்க் சிறிய நாடாக இருந்தாலும் தரமான தமிழ் அறிஞர்கள் நிறைந்த நாடு என்பதை மறுக்க முடியாது. டென்மார்க்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாக்கள் இங்கு கலை வளர்ந்த வேகத்திற்கு அதி சிறந்த எடுத்துக்காட்டு. அன்று தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணியாற்றிய அத்தனைபேருடனும் எனக்கு தொடர்புண்டு. டென்மார்க்கின் அனைத்துப் படைப்பாளிகள், கலைஞர்களுடனும் எனக்கு நெருங்கிய நட்பும் உண்டு. நாம் ஒருவரை ஒருவர் வளர்ப்பதிலும், ஒருவருக்கு மற்றவர் ரசிகராக இருப்பதிலும் பெருமையடைகிறோம். டென்மார்க்கில் கடந்த பத்து ஆண்டுகளாக கலை வளர்ச்சியில் நிலவிய தேக்கம் நீங்கி இப்போது மறுபடியும் புது மெருகு அடைய ஆரம்பித்திருக்கிறது. அதற்கு அலைகள் பத்தாண்டு விழா நிகழ்வுகள் ஒரு சான்றாகும். மேலும் மறுபடியும் முத்தமிழ் விழா வரவிருப்பதாக அறிகிறேன், அதற்காக மகிழ்கிறேன். கலைகளுக்கும் அலைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. கலைகளும் விழுந்து எழுந்து சென்றால்தான் அலைகள் போல அழிவடையாமல் இருக்கும். கலைகளை தட்டையாக வைத்திருந்த நாடுகளில் வளர்ச்சி வீழ்ச்சி என்ற பேச்சில்லாமல் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். டென்மார்க்கில் மட்டும் அப்படி இல்லை என்பது பெருமைதரும் விடயமாகும்.

கேள்வி : நமது கேள்விகளுக்கு இதுவரை பதில்களை வழங்கினீர்கள் இனி கேள்விகள் இல்லாமலே உள்ளத்தைத் திறக்கும் உங்கள் நேரமாகும்..

சிறீதரன் : கடந்த பத்தாண்டுகளாக டென்மார்க்கில் அலைகள் ஆற்றிவரும் பணிகளை பாராட்ட வேண்டுமென மனது ஆவலடைகிறது. டென்மார்க்கிற்குரிய செய்திகளை டென்மார்க் வாழ்வுக் கோணத்தில் இருந்து தருவதைப் போன்ற உயிர்ப்பை மற்றய இடங்களில் இருந்து வரும் ஊடகங்களால் பெற முடியாது. நமக்கென்று ஒரு வாழ்க்கை, நமக்கென்று ஓர் ஊடகம் இப்படி நினைக்கும்போது நமது தனித்துவம் பிரகாசமடைகிறதல்லவா…? கலை மக்களை பண்படுத்த வேண்டும். அதில் பக்கச் சார்பு இருத்தல் கூடாது, வேண்டியவர் வேண்டாதவர் பார்த்தால் அவ்வளவுதான் கலையின் ஜீவன் போய்விடும். பின் எலும்புக் கூடுகளை கயிற்றில் கட்டி இழுத்து ஆட்டுவித்தது போல ஆடவைக்க வேண்டியதுதான். கலைஞன் கயிறுகட்டி இழுத்து ஆட்டுவிக்கும் எலும்புக் கூடாக இருத்தல் கூடாது…
மாற்றுக் கருத்தாளர் என்று புறந்தள்ளுவதல்ல அனைவரையும் உடன்பாடான இடங்களில் ஒற்றுமைப்படுத்துவதே உண்மையான கலைத்துவ ஒற்றுமையாகும். கலையில் ஒற்றுமை வந்தால் அது வாழ்வை ஒற்றுமையாக்கும்.
ஆன்மீகம், இலக்கியம் போன்றவற்றை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது. எனது ஆன்மீகச் சொற்பொழிவுகளை இறுவெட்டாக வெளியிடும் எண்ணமும் உள்ளது.
உலகளாவிய புங்குடுதீவு ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும், அதன் மூலம் செய்யப்படாத பல நற்பணிகளை செய்ய வேண்டும் என்ற ஆவலும் எனக்கு இருக்கிறது.

பேட்டி : அலைகள் ஆசிரியர். 13.05.2010