சண்முகலிங்கம் சாயி
புங்குடுதீவு 12ஆம் வட்டரைத்த
சேர்ந்த பிரபல சங்கீத வித்துவான் ஆசிரிய சண்முகலிங்கத்தின் புத்திரனான சாயி அவர்கள் எண்பதுகளின் ஆரம்பத்தில் சுவிசுக்கு புலம் பெயர்ந்துள்ளார் .இவர் சுவிட்சர்லாந்தில் கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார் .முக்கியமாக நாடகத்துறையில் தனது பலதரப்பட்ட நடிப்பாற்றலால் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார் .புங்கையூர் எஸ் ரமணனின் அல்ப்ஸ் அரங்காடிகள் மற்றும் சு வி கலைக்கூடம் என்பவற்றின் நாடகங்கள் அனைத்திலும் நடித்து உள்ளார் .பெண் வேடமிட்டு மேடையில் புகுந்தால் ரசிகர்களை கொள்ளை கொள்ளுமஇவரது நடிப்பு இவருடைய முத்திரையாகும்
இக்கு அக்கு பச்சை ,வீடில வில்லங்கம் ,என் ஏராளமான ரமணனின் இயக்கத்தில் உருவான நாடகங்கள் அனைத்திலு இவருக்கு ஒரு முக்கிய பாத்திரம் இருக்கும் .அந்த ஆல மரத்தடியில் என்ற நாடகத்தில் இவர் ஏற்ற அருந்தவம் பாத்திரத்தில் புங்குட்தீவு க்கு செல்லும் வெளிநாட்டு மோகம் கொண்ட ஒரு இளைஞனின் துடிப்பு அப்படியே அச்சொட்டாக பொருந்தியது எனலாம்.மேடையில் இவர் தோன்றும் ஒவ்வெரு காட்சியும் ரசிகர்களை சிரிப்பில் குலுங்க வைக்கும் அற்புதங்கள் .எந்த ஒரு பாத்திரத்தை கொடுத்தாலும் யதார்த்தமாக பத்திரமாகவே மாறிவிடும் தன்மை கொண்டவர். அந்த ஆல மரத்தடியில் நாடகத்தில் இவர் வழமைக்கு மாறாக சில காட்சிகளில் சோகமாக நடிக்கும் விதமாக அமைக்கப்டடிருந்த போதும் அதையும் இவர் ஒரு கை பார்த்து மக்களை கவர்ந்திருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக