அரியபுத்திரன் நிமலன்
----------------------------------
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த நிமலன் கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் ஸ்டான்லி கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றுத் தேறியவர் .சுமார் 25வருடங்களாக சுவிசில் வசித்து வரும் இவர் தாயகத்தில் இவரது ஒன்று விட்ட சகோதரரான எஸ்.கே.மகேந்திரனின் பாசறையில் வளர்ந்து ஊரதீவு இளம்தமிழர் மன்றம் , சனசமூக நிலையம் என்பவற்றின் முக்கிய நிர்வாகப் பதவிகளில் இருந்து சமூக சேவை செய்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் ஆன்மீகப்பணி சமுக ப்பணி என்பவற்றில் ஈடுபாடு காடடும் நிமலன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணவு ஒன்றியத்தின் செயல்பாடுகளில் தன்னை ஒருங்கிணைத்து பணியாறுகிறார்.ஆரம்பத்தில் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்த நிமலன் 2009முதல் செயலாளராக திறம்பட திட்டமிட்டு ஒன்றியத்தை வளர்ச்சி பாதையில் இட்டு செல்கிறார்ஒன்றியம் அண்மையில் நடாத்திய ''வேரும் விழுதும் '' விழா இவரது செயல் பாட்டின் வேகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.சிறந்த எழுச்சி முக்கு பேச்சாற்றல் கொண்ட நிமலன் ஆன்மீகப் பணியிலும் செவ்வனே தன்னை அர்ப்பணித்துள்ளார் .பேரன் சைவநெறிகூடத்தின் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சைவ தொண்டில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நிமலன் திட்டமிட்டு செயல்பாடுகளை கொண்டு செல்வதில் வல்லவராக திகழ்கிறார் .இவரது துணைவியாரும் நல்ல சைவ சமய தொண்டர்கள் குடும்பத்தில் இருந்து வந்தமையினால் இவருக்கு ஈடுகொடுத்து ஆண்மீகப்பநியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக