புதன், 7 செப்டம்பர், 2011

ஆறுமுகம்  சிவகுமார் 
------------------------------
புங்குடுதீவு  12ஆம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர் கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்ட பின்னர் சுவிசுக்கு புலம்பெயர்ந்தார் .மூன்றாம் வட்டாரம்  வரதாம்பளை கரம்பிடித்த சிவகுமார் அவர்கள் ஒரு சிறந்த சமூக தொண்டனாவார்.புந்கூட்தேவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பகலதிளிருந்தே மதிய குழு உறுப்பினராக இருக்கும் இவர் சேலாந்து பகுதியில் ஒன்றியத்தின்வளர்ச்சிக்கு பாடுபடிருகிறார்.
எடுத்த காரியத்தை எத்தனை கஷ்டத்தின் மத்தியிலும் சிறப்பாக முடித்து வைத்து சாதிப்பவர் இவர். ஐவரும் இவரது துணைவியரும் நீண்ட காலமாக விடுதளைபணிக்க்காக தம்மையே அர்ப்பணித்து வருகிறார்கள் .இவரதுபுதல்வி சுகந்தியை கூட இந்த வழியில் முன்னிறுத்தி வருகிறார்.மேலும் ஒன்றியத்தின் தயாரிப்பில் உருவான பண்டாரவன்னியன் .அந்த ஆலமரதடியிலே போன்ற நாடகங்களில் சிறப்பாக நடித்துள்ளார் .எமது மக்களின் வாழ்வின் இறுதி நாளாம்       மரண சடங்குகளை எந்த வித எதிர்பார்ப்புமின்றி செவ்வனே செய்து வைப்பதில் முன்னிற்கும் சமூகவியலாளன் இவர்

சுப்பையா வடிவேலு

சுப்பையா  வடிவேலு 
------------------------------
புங்குடுதீவு பத்தாம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவிட்சர்லாந்தின் பேர்ன்-தூண் நகரில் இருபத்தேழு வருடங்களா க வசித்தி வருகிறார்.தாயகத்தில் பிரபலமான வர்த்தகர் குடும்பத்தை சேர்ந்த வடிவேலுஅவர்கள் கணேச மகா வித்தியாலயத்தில் கல்வியை கற்று எண்பதுகளின் ஆரம்பத்தில் ச்விச்சுக்கு புலம் பெயர்ந்தார் .மக்களோடு பழகுவதற்கு இனிமையானவரும் எளிமையானவருமான இவர் புங்குடுதீவு
மக்களிடையே பிரபலமான முதற்தர பிரசையாக திகழ்ந்தார் . 15வருடங்களாகதாயக விடுதலைப் பணிக்கென பாரிய அபங்களிப்பை செய்ததன் மூலம் புங்குடுதீவுக்கு பெருமையை சேர்த்தார் .அத்தோடு ஆன்மீகப் பணியிலும் தனது காத்திரமான பணியை புரிந்து கொண்டிருக்கிறார்.இவர் வாழ்கின்ற ஒபெர்லாந்து பிராந்தியத்துக்கென ஒரு ஆலயத்தை அமைப்பதில் முன்னின்று வெற்றி கண்டுள்ளார் .தூண் வீரகத்தி விநாயகர் ஆலயம் இவரது சின்றந்த ஆன்மீக ப பணிக்கு ஒருஎடுத்துக் காட்டாகும் .அத்தோடு சுவிசில் புங்குடுதீவு மக்களின் ஏகோபித்த அமைப்பாக விளங்கும் புங்குடுதீவு மக்கள் விழுப்புணர்வு ஒன்றியத்தை ஸ்தாபிப்பதில் இருந்து மத்திய குழு உறுபினராக இருந்து வழிகாட்டி வருகிறார்.இவரதுமுகராசியும் இனிதாக உறவாடும் தன்மையும் ஒன்றியத்துக்கு பலவழிகளில் உதவி புரிந்தன.தாயகத்தில் ஒரு மூலையில் கிடக்கும் ஊருக்கான அமைப்பின் விழாவுக்கு தமிழகத்தின் மாபெரும் கவிஞரான வைரமுத்துவையே அழைத்து வந்து தனது ஆளுமையையும் அதியுச்சத் திறமையையும் வெளிக்காட்டினார்.புங்குடுதீவுமக்களில் பலருக்கு திருமண நிச்சயதார்தன்களை செய்து வைத்து பெருமை கொண்டார்.மற்றும் ஒவ்வொரு குடும்பங்களிலும்  நடைபெறுகின்ற மரணச் சடங்குகளிலும் முன்னின்றுமுறைப்படி கிரியைகளை ஆற்றி சிறப்பு படுத்தும் ஆற்றல் கொண்டவர்.இவரது பொதுப்பணிக்கு உறுதுணையாக துணைவியார் நவலீலாவும் ஈடுகொடுதமை பாராட்டத் தக்கது.மொத்தத்தில் ஒருசமூக முன்னிலை யாளன் நேரே கூறலாம்