வியாழன், 1 மார்ச், 2012


திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி 

புங்குடுதீவு ஒன்பதாம் வட்டா

ரத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி தனது ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்திலும்  உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் முடித்துக் கொண்டுசர்வோதயம், புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவு சங்கம என்பவற்றில்  பணியாற்றி விட்டு எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம்பெயர்ந்து ஜெனீவ மாநகரில் வாழ்ந்து வருகிறார் . புங்குடுதீவு.2  செல்லையா சந்திரபாலனை கரம்பிடித்து வாழ்ந்து வருமிவர் ஜெனீவா  நகரில் தமிழ் சிறார்களுக்கு தமிழ் மொழி .நுண்கலைகள் என்பவற்றை போதிக்கும் எண்ணத்தோடு 1997இல் ஜெனீவா தமிழ் கலைகலாசார சங்கத்தை  ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகின்றார்.இந்த மன்றத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் மொழியைக் கற்பதோடு இசை நடன கல்விகளையும் கற்று தேறி வருகின்றனர் .இந்த கல்வி கூடத்தில் தமிழ் சங்கீதம்உட்பட  வயலின்,கிட்டார் .கீபோட் போன்ற வாத்திய வகுப்ப்புகளையும்நடத்தி வருகிறார்  இந்த மாணாக்கர்களின் திறமையை வெளிக்கொனரவென ஈராண்டு  தோறும் இந்த மன்றத்தின் மூலம்கலை  விழாவினையும் நடத்தி வருகின்றார் வருடந்தோறும் வாணி விழாவினையும் இந்த கலைக்கூடம் மூலம் செய்து வருகிறார் இந்த பாடசாலை மாணவர்கள் இசைக்குயில் நட்டியமையில் உட்பட ஏராளமான போட்டிகளும் பல்வேறு கலை நிகழ்சிகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விருதுகளையும் வென்று வருகிறார்கள் .திருமதி ராஜேஸ்வரி தனது தளராத முயட்சியினாலும் திட்டமிட்டு செயல்படும் தன்மையாலும் ஜெனீவா மாநகரின் ஒரு சிறந்த சமூக சேவகியாக தமிழ் மாதர் குலத்திடையே ஒளிவீசுகிறார் .இவருக்கு உறுதுணையாக இவரது கணவரும் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.இவரது கணவரும் புங்குடுதீவுக்காக பல அரிய பணிகளை செய்து வருகின்றார்.பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மீள் புனரமைப்புபநிகளை அருமையாக செய்து முடித்த கையோடு இப்போது கந்தசாமி ஆலயத்தின் ராஜகோபுர நிர்மநிப்பில் தன்னை அர்ப்பணித்துள்ளார்