புதன், 28 செப்டம்பர், 2011

இராசையா சண்முகராசா

இராசையா சண்முகராசா 
 புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை
பிறப்பிடமாகக் கொண்ட சண்முகராசா ஆரம்பக்கல்வியை ஊரதீபு திருநாவுக்கரசு வித்தியாசாலையிலும் தொடர்ந்து கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியையும் கற்று தெரிய பின் எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு(Bern  )புலம் பெயர்ந்தார் .அந்த காலம்  எமது தாய் மொழியில் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் இல்லாத ஒரு காலம்.அதனை விட சுவிசுக்கு தமிழர் வந்த உடனேயே சுவிஸ் மொழிகளைக் கற்க முடியாத நிலை. சன்முகராசாவும் இன்னும் சில இளைஞர்களும் இணைந்து புதிய மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் விதமாக மனிதம் என்னும் பெயரில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்கினார்கள்.இந்த அமைப்பின் மூலம் மனிதம் என்னும் சஞ்சிகையை பிரசுரித்தார்கள். கணணி புழக்கம் இல்லாத அல்லது தமிழ் எழுத்து வரிவடிவம் வராத அந்த காலத்தில் வெறுமனே நிழல்படபிரதி எடுக்கும் முறையை மட்டும் பயன்படுத்தி இந்த சஞ்சிகையை வெளியிட்டனர் .வேறு தமிழ் பத்திரிகைகளில் தாயாக இந்திய நாடுகளில் வரும் முக்கிய செய்திகள் கட்டுரைகளை வெட்டி பிரதி எடுத்து இணைத்தனர் . மிகுதியை தமது கை எழுத்து பிரதியாக எடுத்து சேர்த்தனர் .
புலம்பெயர் நட்டு செய்திகள் தகவல்கள்  பயனுள்ள கட்டுரைகள் எமகீல்லாம் அந்த வேளையில் தேவையான அம்சங்கள் வள தொடங்கியுள்ள இந்த நாடுகள் பற்றிய தகவலகள் என சிறப்பாக தொகுக்கப்பட்டு வெளிவந்த சஞ்சிகைகள் மனிதம் எனலாம் .மதம் ஒரு தடவையாக வெளிவந்த இந்த மனிதம் சஞ்சிகையை ஆசிரிய பீடத்தில் இருந்து அலங்கரித்தார் இ.சண்முகராசா .சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த மனிதம் வெளியானது பாராட்டத் தக்கதே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக