செவ்வாய், 17 ஏப்ரல், 2012

திருச் செல்வம்  .முரளி 
-------------------------------
சுவிட்சர்லாந்தில் ஆன்மீக துறையில் வரலாறு படைத்த ஒரு இளைஞன் என்றால் முரளிக்கே அந்த பெருமை கிடைக்கும் . மிக இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி சைவ  சமய விதிகள் ,வழிபாட்டு  முறைகள் என்பவற்றை ஐயம் திரிபறக் கற்று தேர்ச்சி பெற்ற இவர் சமஸ்கிருதத்தையும் படித்து சைவ சமய கிரியைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார் .வழிதோன்றலாக வரும் வேதியருக்கு ஒப்பாக அத்தனைசமயக் கிரியைகளையும் செய்யும் வல்லமை பெற்ற இவர் சிறிய ஆலயமொன்றை தனது இல்லத்தில் அமைத்து வழிபட்டு வந்தார் நாளடைவில் இன்னும் சில இளைஞர்களை திரட்டி சைவநேறிக்கூடம் என்ற பெயரில் சைவ சமயத்தை வளர்க்க பாதுகாக்க என புறப்பட்டார் .இதன் விளைவாக பெர்ன் மாநகரில் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தை அமைத்து சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலுமே வழிபாடு செய்து புரட்சி செய்து வருகிறார் அத்தோடு வேற்று இனத்து மக்கöளுக்கும் எமது சமய தொன்மைகளை வில்குமுகமாக பல திட்டங்கöலை வகுத்து பிரசாரப் படுத்தி வரும் அரிய சேவையை திறம்பட நடத்தி வருகிறார் .எளிமை .புனிதம்.நேர்மை தூய்மை ,சமயப்பற்று மொழிப்பற்று அடக்கம் இயல்பாக பழகும் தன்மை என்பவற்றை தனது கொள்கைகளாக கொண்டு எமது ilaiya தலைமுறைக்கு வழிகாடியாக விளங்குகிறார் அத்தோடு இளம் சமுதாயத்தில் சமய எழுச்சியை ஊட்டி தன்னை போன்று மேலும் பல இளைஞர்களை சமய முறைமைகளை கற்று டேஹ்ற உதவுகிறார் ஒரு பரம்பரை பிராமணனுக்கு நிகராக இவரது செயலும் திறமையும் மிளிர்ந்து நிற்கின்றன . இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வாடா தென் இந்தியாவில் உள்ள அத்தனை தொன்மை பழமை மிக்க ஆலயங்களையும் தர்சிப்பதொடு மேலும் மேலும் ஆன்மீகத்தை கற்று வரும் இவர் சித்தர்கள் மேல் கொண்ட ஆர்வத்தினால் அவர்கள் சம்பந்தமான செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கு பற்றுகிறார் . ஆன்மிகம் மட்டும் அன்றி நாட்டுப்பற்று நாடகம் நாட்டுக்கூத்து என இவரது பணி நீளுகின்றது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக