வெள்ளி, 23 செப்டம்பர், 2011

இராசமாணிக்கம் ரவீந்திரன்1

புங்குடுதீவு எட்டம் வட்டாரம்
மடத்துவெளியை பிறப்பிடமாக கொண்ட இராசமாணிக்கம் ரவீந்திரன்27.12.1984. . இல்தாயகத்தில் இருந்து
 சுவிசுக்கு இடம்பெயர்ந்தார் .சுவிசில் வோ மாநிலத்தின் பே என்னும் நகரத்தில் தனது ஆரம்ப வாழ்க்கையை பழக்கி கொண்டவர் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தயாளிநியைத் தன வாழ்க்கை துனையாக்க்கி கொண்டார் .
கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி வரை கற்ற இவர் தனது சகோதர்களுடன் இணைந்து கொழும்பு மாநகரில் வர்த்தக நிறுவனங்களை திறம்பட நடத்தி வந்தார் .மடத்துவெளி சனசமூக நிலையத்தின் செவைபுரிதலில் தன்னை இணைத்துக் கொண்டவர் இந்த நிலையத்தின் வாசிகசாலையின் நூலகராக பணியாற்றி உள்ளார்.சுவிசில் சிறந்த கரப்பந்தாட்ட வீரராக எண்பதுகளில் திகழ்ந்த இவர் இங்கும் ஆரம்பத்தில் லவுசான் சொலோதூன் ஆகிய நகரங்களில் இரு வர்த்தக நிறுவனங்களை உருவாக்கி இருந்தார் .பின்னர் தற்போதைய சாயி இம்போர்ட் என்ற சுவிசின் பிரபலமான ஏற்றுமதி இறக்குமதி ஸ்தாபனத்தை நிறுவி திறம்பட வணிகம் செய்து வருகிறார்.இதன் மூலம் ஈட்டிய  பொருளில் தாயக விடுதலைக்கான பங்கோடு எமது ஊருக்கான பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறார்.புங்குடுத்ழீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே போசகராக அங்கம் வக்க்கித  ரவீந்திரன் முதல் ஒன்றியத்தின் தலைவராக பொறுப்பேற்று அதன் பணிகளை செவ்வனே ஆற்றுகிறார்.இவர் தனிப்பட கமலாம்பிகை வித்தியாலயத்தின்நுழைவாயிலைஅழகுற  செப்பனிட்டு கடந்த மார்ச் 2011இல்  திறந்து வைத்துள்ளார்  .அத்தோடு சண்முகநாதன் வித்தியாலயம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு இயங்குவதற்காக முதல் பங்களிப்பை வழங்கி தொடக்கி வைத்துள்ளார்.தாயக காப்பு ,சமூக சேவை.ஊருக்கான பங்களிப்பு என பல வகையிலும் முன்னின்று முகம் சுளிக்காது உதவி வரும் இவர் தான் செய்கின்ற நற்காரியங்களுக்கு விளம்பரம் தேடிகொள்ளாத  தன்னடக்கவாதியாவர் .இவரது உதவும் பணிகளில் இவரது சகோதர்களும் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக