புதன், 5 அக்டோபர், 2011

madathuveli sanasamooka nilaiyam

மடத்துவெளி
சனசமூக நிலையத்தினரும் கரப்பந்தாட்டத்தில் பல சினேகா பூர்வ போட்டிகளை நடத்தியதோடு சுற்று போட்டிகளுக்கும்  சென்று வந்துள்ளார்கள் 
இந்த நிலையத்தின் சண்முகநாதன் ,தர்மபாலன் ,தனபாலன், யோகராசா,சந்திரபாலன் ,வேலுப்பிள்ளை ,சிவலிங்கம் ,கனகராசா ,யோகேஸ்வரன் ,ரவீந்திரன் போன்ற வீரர்கள் சிறந்து விளங்கினார்கள் .உதைபந்தட்டதிலும் இந்த நிலைய சிறப்பான நிலையை எடுத்திருந்தது . எண்பதுகளின் மத்தியில் தீவுப்பகுதி முழுவதுமான சுற்று போட்டியில் அதி உச்ச நிலையாக தீவுப்பகுதி  சாம்பியனாக வெற்றி வாகை சூடி பெருமை கொண்டது .
இதன் வீரர்களாக பாலகுமார் ,பத்மகாந்தன்  ,கனகராசா ,சிவலிங்கம் ,திகிலஅழகன் ,பிரேமானந்தன் ,சந்திரபாலன்,ரவீந்திரன் , மோகனபாலன்.குணபாலன் தனபாலன் தவராசா யோகராசா கருணாகரன்.யோகேஸ்வரன் போன்றவர்கள் விளையாடி கொண்டிருந்தார்கள் 
வல்லன் பகுதியில் ஈஸ்டர்ன் விளையாடுகழகம் தனது உதைபந்தாட்ட திறமையை  நீண்ட காலம் வெளிபடுத்தி வந்தது .இந்த கழகத்தில் முக்கியமாக காந்தன்  பஞ்சன் (கனகராசா) பாலசுப்ரமணியம் கோணேஸ்வரன் போன்றோர் முக்கியமாக அங்கம் வகித்திருந்தார்கள் .குரிச்சிக்காடு முதல் கண்ணகி அம்மன் கோவில் வரை சக்தி விளையாட்டுக் கழகம் தனது கரப்பந்தாட்ட திறமையால் சிறந்து விளங்கியது .இந்த கரபந்தாட்ட வீரர்கள் வரிசையில் குகனந்த வேல் முருகானந்த வேல் சிவநேசன் சதா நேமிநாதன் எமில்யனேஷ் போன்றோர் இடம்பிடித்த  முக்கிய வீரர்கள் ஆவர். முற்றவெளி அரனகி ஆக்கிரமித்து தமது உதைபந்தாட்ட வலிமையால் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்து தந்தவர்கள் நாசரேத் சன சமூக நிலைய அணியாகும் அண்மையில் கூட  இந்த அணி யாழ் மாவட்டத்தின் அதி உயர் விருது ஒன்றை பெற்று ஊடகங்களில் இடம் பிடித்து எமது ஊரின் புகழை பறை சாற்றி நிற்ற்கிறது . பெருங்காடு கிராம முன்னேற்ற சங்க வாலிபர்கள் சிறிது காலம் கரப்பந்தாட்டத்தில் ஆர்வம் கட்டி விளையாடினன்ர்கள் . பேரம்பலம் அஆசிரியர் வழிகாட்ட பாலசுபிரமணியம் (நல்லூரான் ) இந்திரசித்து நாகேந்திரன் .குணம். போன்றோர் இங்கே விளையாடிய முக்கிய வீரர்கள் ஆவர் . பிற்ற்காலத்தில் உருவான ஐங்கரன் சனசமூக நிலையத்னர்  நல்லதொரு உதய் பந்தாட்ட அணையை உருவாக்கி களமாடி வந்தனர்.இந்த அணியில்  கணேசலிங்கம் சுபாச்கரலிங்கம் கோகிலதாசன் திருச்செல்வம் ராசன் பஞ்சலிங்கம் ஞானலிங்கம் போன்றோர் அங்கம் வகித்தனர்  ஊரதீவு இளம் தமிழர் மன்ற தோழர்களும் அறிவகதுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட ஆடி வந்த களமும் இருந்தது .இந்த ஆடுகளத்தில் கோணேஸ்வரன் தயாளன் கைலைவாசன் நித்தியானந்தன் வசந்தன் மோகனதாஸ் கைலாச நாதன் அரிச்சந்திரன் போன்ற வீரர்கள் ஆடி திரிந்த ஒரு காலம் அது . இவற்றை விட இன்னும் சிறு சிறு கழகங்கள் குழுக்களும் புங்குட்தீவில் ஆங்காங்கே உதைபந்தாட்டத்தில் ஈடுபாடு கட்டினர் .மடத்துவெளி வடக்கு,வீரம் புளியடி கண்ணகி அம்மன் கோவிலடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக