ஞாயிறு, 17 ஜூன், 2012


ஒருவழியாக புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பிரச்சனை முடிவை எட்டியுள்ளது
மனம் கசந்தவர்கள் மனம் நொந்தவர்களிடம் ஒருசிலநிபந்தனைகளுடன் நடுனிலையாளர்கள் முன்னிலையில் மனமுருகி கசிந்து கண்ணீர் மல்கி நின்றுள்ளனர்

இத் திடீர் மனமாற்றம் என்ன?ஊர்ப்பற்றா? இல்லவே இல்லை அதைத்தான் பத்திரிகைகள் இணைய தளங்கள்
முகனூல் போன்றவற்றில் ஏற்றிவிற்றுவிட்டார்களே . அப்படியானால் விடயம் என்ன? உங்களின் ஆவல் புரிகின்றது இதோ

இரண்டு மன் மோகன்கள் இதற்குள் நுழைந்த விடயமும் தங்களுக்கு நினைவிருக்கலாம் .அவர்கள் சார்ந்த அமைப்புக்கள் புங்குடுதீவு மக்களிடமும் ஊரின் மீதும் நல்லவிப்பிராயம் கொண்டவர்கள் என்ற படியால்
இரண்டு சிங்குகளையும் அழைத்து இந்த கசமுசாவை முடிவிற்கு கொண்டுவரும்படி ஆணைபிறப்பித்தனர்
இரண்டு பதவியும் போய் தெருவில் நிற்பதைவிட ஒன்றை துறப்பது மேல் என நினைத்தவர்கள் மனம்கசந்தவர்களுக்கு கசப்பு மருந்தையே கொடுக்க முடிந்தது

ஏழாம் வட்டாரக்காரங்கள் மான்மியபுத்தகத்தின் முழுப்பக்கங்களிலும் முகங்காட்டுகின்றார்கள் ஆகவே மான்மியத்தை மாற்ற வேண்டும் என்று மல்லுக்கு நின்று ஊரை இரண்டாக்கியவர்களை நடு நிலைவகித்து ஒன்று சேர்த்த பெருமை ஏழாம் வட்டார காரரான ஒருவரையே சாரும் இப்போது தெரிகின்றதா? யார் பிரதேசவாதிகள் என்று

வரும் ஜுன் மாதம் 24ஆம் திகதி பொது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மனமகிழ்வு கொள்கின்றேன்

ஊர் மானம் வலைத்தளங்களில் வலம் வந்தாலும் ஒன்றுகூடியதே என்னும்போதும் பலரதுஎண்ணங்களை
சிலரது கீழ்தரமான சிந்தனைக்குள் அடக்கிவிடமுடியாது என்பதை தெளிவு படுத்தும் நோக்குடன் தான் எனது முகனூல் மூலம் தெரியப்படித்தினேன் இராமர் பாலம் கட்டும் போது அணில் உதவியதைப் போல் நானும் ஊர் இரண்டுபட்ட போது ஒன்று சேர்ப்பதற்காக எனது பொன்னான நேரத்தை செலவு செய்தில் பெருமிதம் கொள்கின்றேன்

நேரம் பொன்னானது ஒவ்வோர் மணித்துளியும் உனது ஆயுள் எண்ணப்படுகின்றதை உணர்ந்து பிறருக்கு உதவி செய் உபத்திம் கொடுக்காதே
நன்றியுடன் புங்கையூரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக