செவ்வாய், 17 ஏப்ரல், 2012

suresh

ontriya sinnam
sellathurai sathaananthan 
திருச் செல்வம்  .முரளி 
-------------------------------
சுவிட்சர்லாந்தில் ஆன்மீக துறையில் வரலாறு படைத்த ஒரு இளைஞன் என்றால் முரளிக்கே அந்த பெருமை கிடைக்கும் . மிக இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி சைவ  சமய விதிகள் ,வழிபாட்டு  முறைகள் என்பவற்றை ஐயம் திரிபறக் கற்று தேர்ச்சி பெற்ற இவர் சமஸ்கிருதத்தையும் படித்து சைவ சமய கிரியைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார் .வழிதோன்றலாக வரும் வேதியருக்கு ஒப்பாக அத்தனைசமயக் கிரியைகளையும் செய்யும் வல்லமை பெற்ற இவர் சிறிய ஆலயமொன்றை தனது இல்லத்தில் அமைத்து வழிபட்டு வந்தார் நாளடைவில் இன்னும் சில இளைஞர்களை திரட்டி சைவநேறிக்கூடம் என்ற பெயரில் சைவ சமயத்தை வளர்க்க பாதுகாக்க என புறப்பட்டார் .இதன் விளைவாக பெர்ன் மாநகரில் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தை அமைத்து சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலுமே வழிபாடு செய்து புரட்சி செய்து வருகிறார் அத்தோடு வேற்று இனத்து மக்கöளுக்கும் எமது சமய தொன்மைகளை வில்குமுகமாக பல திட்டங்கöலை வகுத்து பிரசாரப் படுத்தி வரும் அரிய சேவையை திறம்பட நடத்தி வருகிறார் .எளிமை .புனிதம்.நேர்மை தூய்மை ,சமயப்பற்று மொழிப்பற்று அடக்கம் இயல்பாக பழகும் தன்மை என்பவற்றை தனது கொள்கைகளாக கொண்டு எமது ilaiya தலைமுறைக்கு வழிகாடியாக விளங்குகிறார் அத்தோடு இளம் சமுதாயத்தில் சமய எழுச்சியை ஊட்டி தன்னை போன்று மேலும் பல இளைஞர்களை சமய முறைமைகளை கற்று டேஹ்ற உதவுகிறார் ஒரு பரம்பரை பிராமணனுக்கு நிகராக இவரது செயலும் திறமையும் மிளிர்ந்து நிற்கின்றன . இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வாடா தென் இந்தியாவில் உள்ள அத்தனை தொன்மை பழமை மிக்க ஆலயங்களையும் தர்சிப்பதொடு மேலும் மேலும் ஆன்மீகத்தை கற்று வரும் இவர் சித்தர்கள் மேல் கொண்ட ஆர்வத்தினால் அவர்கள் சம்பந்தமான செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கு பற்றுகிறார் . ஆன்மிகம் மட்டும் அன்றி நாட்டுப்பற்று நாடகம் நாட்டுக்கூத்து என இவரது பணி நீளுகின்றது 
சுவிசில் வாழும் ஏனையோரில் முக்கியமானவர்கள் -துறை 
-----------------------------------------------------------------------------------
உதயகுமார் -இசை 
ஜெயந்தன் -இசை 
சாமி சுரேஷ்- கவிதை 
க.சேனாதிராசா -விடுதலை பங்களிப்பு 
திருமதி ஞானச்சந்திரன் -கலை ,நாடகம் 
தி.முரளி   ஆன்மிகம் .கலை .நாடகம் 
வி.பகீரதன் -புங்குடுதீவு ஒன்றியம் 
நா.ஜெயகுமார் -ஆன்மிகம் 
சு.சண்முகநாதன் -சமூக சேவை 
எ,திகிலஅழகன் .சமூக சேவை 
சோ.கைலைவாசன்-விடுதலை பங்களிப்பு 
செ.சத்தியமூர்த்தி .விடுதளைபங்களிப்பு 
திருமதி ச.கௌசலா ஆன்மீகம் 
செல்வி லட்சுமணன் -அரசியல் சமூக சேவை 
கி-சௌந்தராசான் வர்த்தகம் 
இ.பாலகுகன் வர்த்தகம் 
இ.ஜெகதீஸ்வரன் வத்தகம் சமூக சேவை 
நகுலேஸ்வரன் -ஒன்றியம் 
க.சிவகுமார் ஒன்றியம் வர்த்தகம் 
க.பாபு வர்த்தகம் 
அ.கைலாசநாதன் ஆன்மிகம் 
ஆ.கைலாயநாதன் வர்த்தகம் 
விகிநீச்வரன் வர்த்தகம் 
ந.குணராசா வர்த்தகம் 
க.ஸ்ரிச்கந்தரசா கணணி
இ.ஸ்ரீஸ்கந்தராசா  வர்த்தகம் 
கமல் வர்த்தகம் 
வி.பாஸ்கரன் வர்த்தகம் 
சிவநேசன் வர்த்தகம் 
க.தயாளன் ஆன்மிகம் 
கிருபைதாசன் ஒளியியல்,வர்த்தகம் 
தர்சிகா கலை ஊடகம் 
திருமதி கஜநிதி சதானந்தன்  கலை 
த.தயாநிதி காந்தன்  கலை 
திருமதி ட.நிமலன் ஆன்மிகம் 
தனபலசுப்ரமனியம் ஆன்மிகம் 
செ.சந்திரபாலன் வர்த்தகம் 
na.சிவதாஸ் ஒளியியல் வர்த்தகம் 
த கை லைமலைனாதன் சமூகசேவை  ஆன்மிகம் 
த.சிவலிங்கம் விடுதலை பங்களிப்பு சமூகசேவை 
ப.தயானந்தன் ஆன்மிகம் 


அன்பு ரவி இதனையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் 


vanathi thesingurajah

புதன், 11 ஏப்ரல், 2012

ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------
புங்குடுதீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிவலைப்பிட்டி தம்பர் கடை சந்தியடி ,புளியடி சாந்தி,நுணுக் கல் ,தொழிலாளர் புரம் ,மாநாவெள்ளை,         போன்ற பிரிவுகளை ஒட்டு மொத்தமாக சின்ன இருபிட்டி என்று அழைப்பது வழக்கம் .இந்த பிராந்தியத்தின் சிற்பி அல்லது வழிகாட்டி என்றால் மக்களின் கை அம்மான் என்று செல்லமாக அழைக்கப் படும் சிவலிங்கத்தையே சுட்டி நிற்கும் .இங்கேயே பிறந்து சிறுவயது முதலே சமுக சேவை யே தனது முழுமூச்சாக கொண்டு புங்குடுதீவு மண்ணின் மேற்கு பக்கத்தை முன்னேற செய்த ஒரு ஒளிவிளக்கு இவர்.01 . 04 . 1948 . இல் பிறந்த சிவலிங்கம் சிவலைபிட்டி சன சமூக நிலையம் ,காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் .என்பவற்றில் செய்யாத பணிகளே இல்லை எனலாம் . சிவலைபிட்டி சனசம்மோக நிலையத்தின் ஆரமப்காலம் தொட்டு அதன் எல்லா வகை நிர்வாக பொறுப்பிலும் இருந்து சிறப்பித்தவர் .அத்தோடு தனக்கு பின்னால் வழிநடத்தவென ஏராளமான இளைஞர்களை பண்படுத்தி மெருகேற்றியவர் .அதனாலோ என்னவோ அம்மானின் விரல் அசைவை கண்டு வீறு கொண்டெழுந்து ஊருக்கு சேவை செய்ய வருடம் தோறும் ஏராளமான வாலிப உள்ளங்கள் போட்டி போட்டு முன்வந்தன.சிவலைப்ட்டி சனசமூக நிலையம் நடத்துகின்ற விளையாட்டு போட்டிகள், நாடக   விழாக்கள் ,சமூகத்  தொண்டுகள் எல்லாவற்றிலும் இவர் முன்னின்று வழி நடத்தினர் .பின்னாளில் இவர் வழிகாட்ட இளம் சமுதாயத்திடம் பல பொறுப்புகளை விட்டு கொடுத்து ஆலோசகராக ஓங்கி நின்றார் .ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகள் முடிய இரவு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இடம்பெறும் ஏராளமான நாடகங்களை எழுஹ்தி நெறிப்படுத்தி நடித்தும் உள்ளார் .இவர் நடித்த பெண் வேடங்கள் சிறப்பான முத்திரை பதித்தவை .கோவலன் கண்ணகி,வஞ்சிக்கபட்டவள்,பண்டாரவன்னியன் போன்றவை அவற்றில் பிரபலமனவையாகும் .காளி கோவில் நிர்வாகத்திலும் பலம்ட்டதிலும் அலங்கரித்து அந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு துணைபோனவர் .சிவலைபிட்டி ச. ச.நிலையத்தின் பணியான  இந்த ஆலய திருவிழா கால அன்னதான சேவை பொறுப்பை திறம்பட செய்து வந்தார் .மது ஒழிப்புக் கழகம் ,இணக்க சபை போன்ற அமைப்புகளும் இவரை உள்வாங்கி சிறப்பு பெற்றன.,தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றின் முழுமூச்சான அரசியல் பணிக்கு தன்னை இணைத்து கொண்ட இவர் பின்னாளில் தாயக விடுதலைக்கான பங்களிப்பையும் செய்து வந்தார் .இதனை கண்ணுற்ற மாற்றுகருத்து பச்சோந்திகள் .22 .11 .1988  இல் .அநியாயமாக  இவரது உயிரை இளம் வயதிலேயே பலிகொண்டு விட்டனர்   .ஆனாலும் சிவலைபிட்டி சனசமூக நிலைய சிற்பி சிவலிங்கம் என்றே இன்றும் இந்த மண்ணின் மைந்தர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள் .இருப்பார்கள் .

வியாழன், 1 மார்ச், 2012


திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி 

புங்குடுதீவு ஒன்பதாம் வட்டா

ரத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி தனது ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்திலும்  உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் முடித்துக் கொண்டுசர்வோதயம், புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவு சங்கம என்பவற்றில்  பணியாற்றி விட்டு எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம்பெயர்ந்து ஜெனீவ மாநகரில் வாழ்ந்து வருகிறார் . புங்குடுதீவு.2  செல்லையா சந்திரபாலனை கரம்பிடித்து வாழ்ந்து வருமிவர் ஜெனீவா  நகரில் தமிழ் சிறார்களுக்கு தமிழ் மொழி .நுண்கலைகள் என்பவற்றை போதிக்கும் எண்ணத்தோடு 1997இல் ஜெனீவா தமிழ் கலைகலாசார சங்கத்தை  ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகின்றார்.இந்த மன்றத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் மொழியைக் கற்பதோடு இசை நடன கல்விகளையும் கற்று தேறி வருகின்றனர் .இந்த கல்வி கூடத்தில் தமிழ் சங்கீதம்உட்பட  வயலின்,கிட்டார் .கீபோட் போன்ற வாத்திய வகுப்ப்புகளையும்நடத்தி வருகிறார்  இந்த மாணாக்கர்களின் திறமையை வெளிக்கொனரவென ஈராண்டு  தோறும் இந்த மன்றத்தின் மூலம்கலை  விழாவினையும் நடத்தி வருகின்றார் வருடந்தோறும் வாணி விழாவினையும் இந்த கலைக்கூடம் மூலம் செய்து வருகிறார் இந்த பாடசாலை மாணவர்கள் இசைக்குயில் நட்டியமையில் உட்பட ஏராளமான போட்டிகளும் பல்வேறு கலை நிகழ்சிகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விருதுகளையும் வென்று வருகிறார்கள் .திருமதி ராஜேஸ்வரி தனது தளராத முயட்சியினாலும் திட்டமிட்டு செயல்படும் தன்மையாலும் ஜெனீவா மாநகரின் ஒரு சிறந்த சமூக சேவகியாக தமிழ் மாதர் குலத்திடையே ஒளிவீசுகிறார் .இவருக்கு உறுதுணையாக இவரது கணவரும் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.இவரது கணவரும் புங்குடுதீவுக்காக பல அரிய பணிகளை செய்து வருகின்றார்.பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மீள் புனரமைப்புபநிகளை அருமையாக செய்து முடித்த கையோடு இப்போது கந்தசாமி ஆலயத்தின் ராஜகோபுர நிர்மநிப்பில் தன்னை அர்ப்பணித்துள்ளார் 

வியாழன், 6 அக்டோபர், 2011

 vanathi thesungurajah
 kamal - ravindran
 thankarasa (mathi)
 sathuja prasanna (ponnaadai porthu kaouravikkapadupavar ) valam
 srithas


 selvakumar  kones


புதன், 5 அக்டோபர், 2011

மானா வெள்ளை ,
வல்லன் ,சந்தையடி நுணுக்கள் குறிகட்டுவான் போன்ற இடங்களில் பந்தாடினார்.மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

madathuveli sanasamooka nilaiyam

மடத்துவெளி

சிவராசா ஸ்ரீ சஜிதா
(நாடு கடந்த தமிழீழ அரசு பாராளுமன்ற உறுப்பினர் )

ஸ்ரீ சஜிதா புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வீரகத்தி சிவராசாவின் புதல்வியாவார் .சுவிட்சர்லாந்த் செங்காலன் நகரில் வசித்து வரும் இவர் தனது உயர்கல்வியை கற்றுக்கொண்டு தமிழினத்தின் விடுதைலைக்காக ஏராளமான செயலபாடுகளில்  தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார் .இளைஞர் அமைப்பில் இணைந்து  எமது இனத்தின் விடிவுக்காக பல திட்டங்களை முறைப்படி ஒழுங்கு படுத்தி செயலாக்கி வருகிறார்.தமிழ் ஜெர்மன் பிரஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிச்சயமான ஸ்ரீ சஜிதா மிக இளம் வயதிலே சமூக இன மொழி சேவை புரிய வந்திருப்பது பாராட்டுக்குரியதே .இளம் தலை முறைக்கு முன்னுதாரணமாக திகழும் இவர் கடந்த மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சங்க கூட்டத்தில் தமிழரின் விடிவுக்காய் ஆங்கில மொழியில் ஓங்கி ஒலித்த காட்சி எல்லா ஊடகங்களையும் அலங்கரித்தது  நினைவிருக்கும் .

புங்குடுதீவில் விளையாட்டு துறை


புங்குடுதீவில்  விளையாட்டு  துறை 
------------------------------------------------
சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் புங்குடுதீவு மண் விளையாடு துறையை கூட விட்டு வைக்கவில்லை .அந்த துறை சம்பந்தமாக ஓரளவு சொல்லும் விதமாக இந்த கட்டுரை   அ மைகின்றது  .புங்குட்தீவில் விளையாட்டு என்றதும் முதலி சொல்ல வேண்டிய ஒரு அமைப்பு சிவலைபிட்டி சன சமூக நிலையம் தான் என்பதில் யாரும் குறை சொல்ல மாடார்கள் .வருட பிரப்பென்ர்டஹு இந்த நிலையம் நடத்தும் சைக்கிலோட்ட போட்டி  மற்று மரதன் உட்பட்ட விளையாட்டு போட்டிகளின் நல என்பது எள்ளல புங்குடுதீவு மக்களுக்கும் நினைவுக்கு வரும் .சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த நாளில் இடைவிடாது கோலாகலமாக மாபெரும் விழாவாக இதனை நடத்தி வந்தவர்கள் சிவலைபிட்டி ச.ச.நிலையத்தினர் .   35மைல் சைக்கிலோட்ட போட்டி ௧௦10மைல் மரதனோட்டம் பெண்களுக்கான இதே போட்டிகள் மாட்டு வண்டி சவாரி போட்டி கரப்பந்தாட்டபோட்டிகள் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் என பகல் முழுவதும் நடத்தி இரவில் பரிசளிப்பு விழ நடத்தும் சிறப்பு பாராட்டப் பட வேண்டியது .நுணுக்க ல் வெளியில் இவர்கள் நடத்தும் மாடு வண்டி சவாரி போட்டிக்கென வட மாகாணம் முழுவதும் இருந்து வீரர்கள் வந்திருப்பார்கள் 
இந்த நிலையத்தினர் தினமும் மாலை வேளையில் கரப்பந்தாட்டம் ஆடுவது ஒரு அறிய உடற்ற்பயித்ர்ச்சி  முறையாகும் .இன்னும்சொல்ல போனால்  களம்  இவர்கள் இப்போது நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை போல சுற்றுப்போட்டிகள் லீக் முறை போட்டிகளை அப்போதே  அங்கெ நடத்தி கட்டிய வரலாறு படைத்திருகிறார்கள்.இவர்களது மைதானத்தில் வேறு கழகங்கள் வந்து விளையாடுவதும் இவர்கள் அங்கெல்லாம் போய் ஆடுவதுமாக இருந்த இந்த முறை இபோதைய மேற்கு நாட்டவ்ரின்முறை தானே .இவர்கள் சென்று ஆடியதும் அழைத்து ஆடியதுமான முக்கிய கழகங்கள் கரம்பொன் ,.பருத்தியடைப்பு, தம்பாட்டி ,வேலணை , வேலனைத்துறை ,உடுப்பிட்டி இமையாணன் ,கரவெட்டி, அச்சுவேலி என்ற வரிசையில் சொல்லி கொண்டே போகலாம் .பல சுற்று போட்டிகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்கள் வீரர்க  ள் வரிசையில் சிவலிங்கம் (அம்மான் ),சின்னராச தங்கராசா ,பிள்ளை நாயகம் , சண்முகலிங்கம், ஸ்ரீதரன் ,தயாபரன் பாலசுப்ரமணியம், அருள் போன்றோரும் சிறந்து விளங்கினார்கள் .சைக்கிலோட்ட போட்டிகளில்ரஞ்சன்  ,மகான் ,கேதான் ,செல்வேந்திர ராசா   போன்ற வீர்களும் பெண்கள் வரிசையில் கௌசல்யா, உதயா போன்ற வீராங்கனைகளும் புகழ் பெற்று விளங்கினார்கள் .
இவர்களை போன்றே தைப்பொங்கல்  நாளில் இருபிட்டி சன சமூக நிலையத்தினர் சைக்கிலோட்ட போட்டிகளை மற்றும் கரப்பந்தாட போட்டிகளை நடத்தி மகிழ்வித்தார்கள் .இவர்களும் சங்கரதாஸ் போன்ற சிறந்த வீரகளை கொண்டு அணி அமைத்து இருந்தார்கள் .அடுத்து மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் புங்குடுதீவில் சிறந்த விளையாட்டுத்துறையை வளர்த்தெடுத்தனர். இவர்களும் மாலை neரத்தில் கரப்பந்தாட்டம் உதபந்தாட்டம் என இரண்டிலும் சிறந்து விளங்கினார்கள் .எண்பதுகளின் ஆரம்பத்தில் தீவுப்பகுதியிலே சிறந்த உதைபந்தாட்டக் கழகமாக தெரிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது மேலும் நாசரேத் உதைபந்தாட்டக் கழகம் அண்மையில் தீவுப்பகுதி சாம்பியனாகி வடமகனதிலும் பல சாதனைகளை படைத்துள்ளது .புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உதைபந்தாட்ட அணியும் வலைபந்தட்ட பெண்கள் அணியும் உன்னத சாதனைகளை செய்துள்ளது மேட்குரிபிட்ட கழகங்கள் எல்லாமே சில காலங்களில் தாச்சி என்னும் கிளித்தட்டு விளையாட்டையும் விளையாடி வருவார்கள் .மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அவ்வப்போது கிரிக்கெட்டும் விளையாடி  வந்திருகிறார்கள் , எமது ஊரில் பல சுதேச விளையாட்டுக்களும் மக்கள் விளையாடி வந்துள்ளனர் .கிட்டி அடித்தல் ,தாச்சி,மாபிள் அடித்தல் ,போன்றவைஅவை . எமது ஊரில் நிறைய குளங்கள் ,கடற்கரைகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள்  நீச்சலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர் . இனி தனிப்பட்ட ரீதியில் நிறைய வீரர்கள் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளனர் . முக்கியமாக சி.தனபாலசுந்தரம்(ஒட்ட்டம் -வடமாகான  முதல் இடம்--அகில இலங்கை இரண்டாம் இடம் ),சதானந்தன் (குண்டெறிதல் .வடமாகாண முதலாம் இடம் ),இன்னும் வி.லோகநாதன் (சிவா)-குண்டு, கனகராசன் .புங்குட்தீவு 2(ஓட்டம் )   கைலைவாசன் (மரதன்)என்போரும்  இடம் பிடிகிர்ரர்கள் .

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி

அமரர் கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி 

கொழும்பு மாநகரில் பிரபலமான பொலிஸ்
அதிகாரி புண்ணிய மூர்த்தி மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார் என்ற செய்தி புங்குட்தீவை மட்டும் அல்ல அகில இலங்கையையுமே உலுப்பி எடுத்தது எழுபதுகளில் ஒரு நாளில்.புங்குட்தீவு எட்டம் வட்டாரத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி கமலாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து தொழில் கல்வியை காவல் துறை பாடசாலையிலும் கற்று சாதாரண காவல்துறை  உத்தியோக்கதரானர் .சில ஆண்டுகளிலேயே இவரது தொழில் திறமை வல்லமை ஆளுமை வீர சாகசங்கள  உயர் பதவிக்கு அழைத்துச் சென்றது .அந்த வகையில் காவல்துறை பொறுப்பதிகாரியாக கணபதிபிள்ளை புண்ணிய மூர்த்தி பதவி உயர்ந்தார்.இவரது சொந்த மைத்துனி விக்க்னேஸ்வரியை நிச்சயம் செய்ய எண்ணி இருந்த வேளையில் ஒரு இரவு தொடங்கும் வேளையில் இவர் ஒட்டி சென்ற மோட்டர் சைக்கிள்  (ஈ ரூந்துமோட்டார்  ) வெள்ளவத்தை பகுதியில்

கட்டுப்பட்டஈழந்து ஒரு தந்திகம்ப்பதுடன் மோதுண்ட பொது இவர் ஸ்தலத்திலேயே காலமானார் .இவரது நிச்சயிக்கப்பட்ட மத்துநியானவர் இவரது சகோதரன் லட்சுமணனை மனது தற்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார் .புங்குடுதீவு மடத்துவெளி மண்ணுக்கு கிடைத்த அற்புதமான காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி இப்போது எம்மிடம் இல்லை 
கதிர்காமு  சண்முகராசா (சண் .ரவி )
-----------------------------------
இன்றைய இணைய உலகின்
நவீனத்துவத்தின் கதாநாயகர்களில் இ வரும் ஒருவர் தமிழ் ஊடகங்களில் கோலோச்சும் இணைய வரிசையில் முன்வரிசை இடம் எடுத்துள்ள எமது தாய் மண்ணின் படைப்பாளியின் கைவண்ணம் மை கதிரவன் எனபது எல்லோரும் அறிந்ததே .ஆமாம் .புங்குட்தீவு3 ஆம் வட்டாரத்தை சேர்ந்தகதிர்காமு சண்முகராசா சுப்பிரமணிய வித்தியாலயத்தில் ஆரம்பக் கலவியையும் உயர்கல்வியை மக வித்தியலயதிலும் கற்று எண்பதுகளின் பின்பகுதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்தார் .இளைஞனாக வந்த சண்முகராசா தனது தாயாக விடுதலை போருக்கான பங்கை செலுத்தும் எண்ணத்துடன் அந்த செயல்பாடுகளில் தன்னை இணைத்து கொண்டார்.நீண்ட காலமாக தாயாக பணிகளில் ஈடுபாடு கொண்ட சண்-ரவி
காப்புறுதி வங்கி செயல்பாடுகளை கற்றுதேறி தனியே அவை சம்பந்தமான நிறுவனம் ஒன்றை நிறுவி  செயல் படுத்தி வருகிறார்.பின்னாளில் நவீன ஊடகத்துறையான இணையதளத்தின் உன்னத உயர்ந்த பரந்த செயல்பாட்டின் உச்ச பலன் பற்றி விளங்கி கொண்டவராக அதன் பால் ஈர்க்கப்பட்டு தமிழினத்துக்கு செய்கின்ற ஒரு சேவையாக எமது இனத்தை எழுச்சி கொள்ள வைக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தும் நல நோக்கில் மை கதிரவன் என்ற இணையத்தை ஆரம்பித்தார் .ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பித்து  பின் தேவை கருதி ஜனரஞ்சகமான ஒரு பாரிய இணைய தளமாக அதனை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறார் .தமிழனுக்கு தேவையான அத்தனை அம்சங்களை ஒருமித்து உள்ளடக்கிய ஒரு தளமாக மாற்றி புரட்சி செய்துள்ளார் சண்-ரவி அவர்கள் .எந்த வித வர்த்தக நோக்கமும் இன்றி சாதரணமாக  நடத்தி வருகின்ற இந்த இணையதளத்தின் பார்வையாளர்களின் தொகை நாளுக்கு நாள் பெருகி வருவது இவரது உழைப்புக்கு கிடைத்த உன்னத பலனாகும்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயல் பாடுகளிலும்  கணிசமான பங்களிப்பை  செ ய்து வருகிறார் சண்-ரவி  www. mykathiravan  .com