ஞாயிறு, 2 அக்டோபர், 2011

இ .இராசமாணிக்கம்


இ .இராசமாணிக்கம் 1
புங்குடுதீவு 8 aam
வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட  புரோக்கர் என்று செல்லமாக அழைக்கப் படும் இராசமாணிக்கம் ஒரு அற்புதமான இசை நாடக கலைஞன் .எண்பதுகளின் இறுதியில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த இராசமாணிக்கம் இளைஞனாக  இருந்த காலம் தொட்டே இசையில் ஆர்வம் கொண்டு காணப்பட்டார் .கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் இவரது உறவினராகிய போ.கந்தசாமி  மற்றும் மகேஸ்வரன் (மலைப்பாம்பு ) ஆகியோருடன் இணைந்து மடத்துவெளி வீரத்தி விநாயகர் ஆலயத்த்தின் ஒரு நாள் தைப்பொங்கல்  விழாவில் விடிய விடிய இசைக் கச்சேரியை செய்து வந்த  பெருமைக்குரியவர் .அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை பழைய மனவர்சங்கத்தை உருவாக்கி செயலாற்றினார் . அதே கால ப்பகுதியில் சில விழாக்களை நடாத்தி அதிலே நாடகங்களை நடத்தி புகழ் பெற்றவர்.பின்னர் யாழ்ப்பான பகுதிகளிலே பிரபலமான ரங்கன் இசைக்குழுவில் இணைந்து சிறந்த இசைக்க்லைஞனாகவும் மிளிர்ந்தார் .அந்த காலத்திலே பிரபலமான ரங்கன் இரட்டையர்கள் கண்ணன் இசைக்குழுக்களில் பல்வேறு வாத்தியக் கலைஞனாகவும் புகழ் பெற்ற இவர் எழுபதுகளில் மடத்துவெளி சனசமூக நிலையத்தின் எழுச்சிக்கு முக்கிய காரண கர்த்தவானார் .சன சமூக நிலையத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டியதோடு அதன் வசிக்க சாலையின் பொறுப்பாளராக கால் நூற்றாண்டு காலமாக  பணி புரிந்தார் .இந்த

காலத்தில்  வாசிக சாலைய காலை ஒன்பது மணிக்கு திறந்து சுத்தம் செய்து பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஐ ஒழுங்கு படுத்தி வைத்து விட்டு  பின்னர் மாலை எழு மணிக்கு மூடி விட்டு செல்லும் வழக்கத்தை எந்த வித சம்பளமும் இன்றி புரிந்த மகத்தான மனிதர்.மடத்து வெளி சன சமூக நிலையத்தின் மலரவில் நாடக கலா மன்றத்தின் அனைத்து நாடகங்களிலும் சிறந்த குணா சித்திர பாத்திரங்களில் நடித்து பெருமை பெற்றவர்.இந்த வரிசையில் அந்தஸ்து நாடகத்தில் புரோக்கராக நடித்த காரணத்தால் புரோக்கர் ஐயா என்ற செல்லபெயரே இவருக்கு வழங்கல் ஆயிற்று . தகப்பன் பாத்திரம்ம் ஏற்று இவர் நடித்த அத்தனை நாடகங்களும் நகைச்சுவை ,குண சித்திரம், தத்துவம்,சிந்தனை,குடும்ப பாங்கு,பாச வெளிப்பாடுகள் என ஒருங்கிணைந்து வெளிபடாகின. அந்தஸ்து ,காகித ஓடம்,செத்தவன் சாக இருப்பவனைச்  சாகடிப்பதா, மெழுகுவர்த்தி அணைகின்றது,கிராமத்து  அத்தியாயம்  ,பகலிலே யாழ்ப்பாணம் (கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம் )  என  இவரது நடிப்பில் உயர்ந்த நாடகங்களை பெயரிட்டு கொண்டே போகலாம் .நாடக ஒத்திகைக்கு தினமும் மாலையானதும் தனது மேன்டலின் இசைக்கருவியுடன் வந்து  களை   கட்ட 
வைக்கும் காட்சியே  அற்புதமாக  இருக்கும் . நகைச்சுவை ததும்ப இவர் நாடக வசனங்களை இயல்பாக கிராமத்து வழக்கிலேயே பேசும் போது சிறப்பான கட்டத்தை  அந்நாடகங்கள் அடையும்.இவரது வசன பாணி ஈழத்துக் கலைஞா அப்புக்குட்டி ராஜகோபாலை நினைவு படுத்தும் .இராசமாணிக்கம் ஆதி காலம் தொட்டே ஒரு சாயி பக்தர். மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்திலும் பங்கேற்று பணியாற்றி உள்ளார் .தமிழகத்தில் தற்போது வாழும் இவர்  அங்கேயும்  திருச்சி சத்யா சாயி பாபா வழிபாட்டு மன்றத்தில் பஜனை குழுவில் முக்கியஸ்தராக இசை கலைஞனாக இருந்து வருகிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக