ஞாயிறு, 2 அக்டோபர், 2011

இ .இராசமாணிக்கம்


இ .இராசமாணிக்கம் 1
புங்குடுதீவு 8 aam
வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட  புரோக்கர் என்று செல்லமாக அழைக்கப் படும் இராசமாணிக்கம் ஒரு அற்புதமான இசை நாடக கலைஞன் .எண்பதுகளின் இறுதியில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த இராசமாணிக்கம் இளைஞனாக  இருந்த காலம் தொட்டே இசையில் ஆர்வம் கொண்டு காணப்பட்டார் .கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் இவரது உறவினராகிய போ.கந்தசாமி  மற்றும் மகேஸ்வரன் (மலைப்பாம்பு ) ஆகியோருடன் இணைந்து மடத்துவெளி வீரத்தி விநாயகர் ஆலயத்த்தின் ஒரு நாள் தைப்பொங்கல்  விழாவில் விடிய விடிய இசைக் கச்சேரியை செய்து வந்த  பெருமைக்குரியவர் .அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை பழைய மனவர்சங்கத்தை உருவாக்கி செயலாற்றினார் . அதே கால ப்பகுதியில் சில விழாக்களை நடாத்தி அதிலே நாடகங்களை நடத்தி புகழ் பெற்றவர்.பின்னர் யாழ்ப்பான பகுதிகளிலே பிரபலமான ரங்கன் இசைக்குழுவில் இணைந்து சிறந்த இசைக்க்லைஞனாகவும் மிளிர்ந்தார் .அந்த காலத்திலே பிரபலமான ரங்கன் இரட்டையர்கள் கண்ணன் இசைக்குழுக்களில் பல்வேறு வாத்தியக் கலைஞனாகவும் புகழ் பெற்ற இவர் எழுபதுகளில் மடத்துவெளி சனசமூக நிலையத்தின் எழுச்சிக்கு முக்கிய காரண கர்த்தவானார் .சன சமூக நிலையத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டியதோடு அதன் வசிக்க சாலையின் பொறுப்பாளராக கால் நூற்றாண்டு காலமாக  பணி புரிந்தார் .இந்த

காலத்தில்  வாசிக சாலைய காலை ஒன்பது மணிக்கு திறந்து சுத்தம் செய்து பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஐ ஒழுங்கு படுத்தி வைத்து விட்டு  பின்னர் மாலை எழு மணிக்கு மூடி விட்டு செல்லும் வழக்கத்தை எந்த வித சம்பளமும் இன்றி புரிந்த மகத்தான மனிதர்.மடத்து வெளி சன சமூக நிலையத்தின் மலரவில் நாடக கலா மன்றத்தின் அனைத்து நாடகங்களிலும் சிறந்த குணா சித்திர பாத்திரங்களில் நடித்து பெருமை பெற்றவர்.இந்த வரிசையில் அந்தஸ்து நாடகத்தில் புரோக்கராக நடித்த காரணத்தால் புரோக்கர் ஐயா என்ற செல்லபெயரே இவருக்கு வழங்கல் ஆயிற்று . தகப்பன் பாத்திரம்ம் ஏற்று இவர் நடித்த அத்தனை நாடகங்களும் நகைச்சுவை ,குண சித்திரம், தத்துவம்,சிந்தனை,குடும்ப பாங்கு,பாச வெளிப்பாடுகள் என ஒருங்கிணைந்து வெளிபடாகின. அந்தஸ்து ,காகித ஓடம்,செத்தவன் சாக இருப்பவனைச்  சாகடிப்பதா, மெழுகுவர்த்தி அணைகின்றது,கிராமத்து  அத்தியாயம்  ,பகலிலே யாழ்ப்பாணம் (கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம் )  என  இவரது நடிப்பில் உயர்ந்த நாடகங்களை பெயரிட்டு கொண்டே போகலாம் .நாடக ஒத்திகைக்கு தினமும் மாலையானதும் தனது மேன்டலின் இசைக்கருவியுடன் வந்து  களை   கட்ட 
வைக்கும் காட்சியே  அற்புதமாக  இருக்கும் . நகைச்சுவை ததும்ப இவர் நாடக வசனங்களை இயல்பாக கிராமத்து வழக்கிலேயே பேசும் போது சிறப்பான கட்டத்தை  அந்நாடகங்கள் அடையும்.இவரது வசன பாணி ஈழத்துக் கலைஞா அப்புக்குட்டி ராஜகோபாலை நினைவு படுத்தும் .இராசமாணிக்கம் ஆதி காலம் தொட்டே ஒரு சாயி பக்தர். மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்திலும் பங்கேற்று பணியாற்றி உள்ளார் .தமிழகத்தில் தற்போது வாழும் இவர்  அங்கேயும்  திருச்சி சத்யா சாயி பாபா வழிபாட்டு மன்றத்தில் பஜனை குழுவில் முக்கியஸ்தராக இசை கலைஞனாக இருந்து வருகிறார் 


டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.


டென்மார்க்கில் சுமார் 10.500 பேர்வரை தமிழ் மக்கள் வாழ்வதாக சமீபத்தய கணிப்புக்கள் கூறுகின்றன. இந்தச் சிறிய எண்ணிக்கைக்குள் ஒரு தேசத்திற்குரிய அடையாளங்கள் என்று என்னென்ன விடயங்கள் இருக்க வேண்டுமோ அத்தனை அம்சங்களையும் இலங்குவதைக் காணலாம். அந்தவகையில் கடந்த 25 வருடங்களாக டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.
டென்மார்க்கில் தமிழர்கள் குடியேறிய 25 வருட நினைவுகளின் ஓரங்கமாக இப்பேட்டிகள் தொடராக வெளிவருவது குறிப்பிடத்தக்கது..

வணக்கம் சிறீதரன் அவர்களே..
சிறீதரன் : வணக்கம்.

கேள்வி : முதலில் உங்களைப் பற்றியும், மறக்க முடியாத இளமைக்காலத்தைப் பற்றியும் ஒரு சிறிய முன்னோட்டத்தைத் தாருங்கள்.. ?

சிறீதரன் : உங்களுக்கு புங்குடுதீவை தெரிந்திருக்கும். ஆலயங்கள், திருவிழாக்கள், கலைவிழாக்கள் என்று எப்போதுமே கலையால் களைகட்டித் திகழும் அழகிய தீவு. அந்தப் புங்குடுதீவிற்குள் ஊரதீவு என்று இன்னொரு தீவு இருக்கிறது. இரண்டு பக்கங்கள் கடலாலும், இரண்டு பக்கங்கள் மழை நீராலும் சூழப்பட்ட, உப்பும், இனிப்பும் கலந்தெடுத்த சுந்தரத் தமிழ்க் காற்று தாலாட்டும் தீவு இந்த ஊரதீவு. இதுதான் நான் பிறந்து வளர்ந்த இடம்.

கேள்வி : உப்புக்கரிக்கும் நீர் இருபுறம், அள்ளிக் குடிக்கும் மழைநீர் மறுபுறமும் அமைவது இயற்கையின் இனிய காட்சியாகும்.. கேட்கச் சுகமாக இருக்கிறது.. சுவர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.. ம்..! மேலும் கூறுங்கள்.

சிறீதரன் : இந்தத் தீவைச் சுற்றி நிற்கும் ஏரியில் மாரி காலத்தில் நீர் இருக்கும், கோடை காலத்தில் வற்றிவிடும். கோடை காலத்தில் அந்த ஏரிப்பகுதி எமக்கு திறந்தவெளி கலையரங்கமாகவும் விளையாட்டரங்கமாகவும் திகழ்ந்தது. எனவே நமக்கு பாதிக்காலமும், நீருக்கு பாதிக்காலமுமாக அந்த நிலப்பகுதி மீது உரிமை கொண்டாடும் அரிய வாய்ப்பு இருந்தது. ஒருபக்கம் உப்பு, மறுபக்கம் இனிப்பு இரண்டுக்கும் நடுவே நாங்கள். அதுமட்டுமா அங்கே ஓர் அழகான சிவன் கோவில். அங்கிருக்கும் இறைவன் பாணாவிடை தான்தோன்றீஸ்வரராகும். அந்தக் கோயிலைச் சுற்றி சிறிய மலை, காடு, கடல், வயல், என நால்வகை நிலங்களும் சூழ்ந்து தெய்வீகமயமான ஒரு பகுதியாகக் காட்சிதரும். அங்கே நாம் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்தோம். இந்தியாவுடன் இலங்கை இணைந்திருந்த காலத்திலேயே இதன் சிறப்பும் பழமையும் துலங்கியிருக்க வேண்டும். ஒரு தீவை பன்னிரண்டு வட்டாரங்களாக பிரித்து, ஒரு வட்டாரத்திற்கு ஊரை என்று பெயர் வைக்கும் மரபு மிகத் தொன்மையான காலத்திற்குரியது, அந்தச் சிறப்பின் அடையாளமே நமது ஊரதீவு. இது பண்டைக்காலத்தில் தமிழகமும், இலங்கையும் இணைந்திருந்தமைக்கு ஓர் உதாரணமாகும்.

கேள்வி : புங்குடுதீவு உட்பட பொதுவாக தீவுப்பகுதியில் கல்வி நன்கு முன்னேறியிருக்கும். இலங்கையின் சிறந்த கல்வியியலாளர் பலரைத் தந்த பெருமை தீவுப்பகுதிக்கு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன ?

சிறீதரன் : தீவுப்பகுதி மக்கள் கல்வியில் முன்னேற வேண்டிய நெருக்குதலைத் தந்தது வரட்சி. இதன் காரணமாக வர்த்தகமே தீவுப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக இருந்தது. வர்த்தகத்தில் போதிய பணம் ஈட்டிய காரணத்தால் தங்கள் பிள்ளைகளை பிரபலமான பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைத்தார்கள் நம்பகுதி மக்கள். இதனால் கல்வி கற்ற சமுதாயம் ஒன்றை தடையின்றி உருவாக்க வழி பிறந்தது. வர்த்தகம், கல்வி இவை இரண்டும் நமது கண்களாகவே இருந்தன. தீவுப்பகுதிகள் கல்வியில் பாரிய முன்னேற்றம் காண இதுவே முக்கிய காரணமாகும்.

கேள்வி : நீங்கள் சிறந்த சமயச் சிந்தனையாளராக, பேச்சாளராக வருவதற்கு தூண்டுதலாக இருந்த பின்புலங்கள் எவை ?

சிறீதரன் : நமது ஊரதீவில் கிராமமுன்னேற்றச் சங்கம், சனசமூகநிலையம், மற்றும் புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் போன்றன இருந்து கலைகளை வளர்க்க அரும்பாடுபட்டன. புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் கலைவிழாக்களை நடாத்துவதில் பெரும் அக்கறை காட்டிவந்தது. ஏரியின் பக்கத்திலேயே அறிவகம் என்ற நூலகம் அமைந்துள்ளது. அக்காலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக அறிவகத்தில் இருந்தே ஒத்திகைகளை பார்ப்போம். அக்காலத்தே நான் நமது ஊரில் உள்ள திருநாவுக்கரசு வித்தியாலயம், புங்குடுதீவு மத்திய மகாவித்தியாலயம் போன்றவற்றில் படிக்கும்போது மேடைப்பேச்சில் வல்லவனாக வருதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். பிற்காலத்தில் இளந்தமிழர் மன்றத் தலைவராக இருந்தமையால் பல இடங்களுக்கும் சென்று பேச வாய்ப்பும் கிடைத்தது. எனவே நான் பேச்சாளராக வருவதற்கு வாழ்ந்த சூழல் ஒரு பிரதான காரணமாகும்.

கேள்வி : அதேவேளை உங்களுடைய பேச்சிலும், சிந்தனையிலும் அக்காலத்து தீவகப் பெருமக்கள் பலருடைய தாக்கம் தெரிகிறது..

சிறீதரன் : உண்மைதான், காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.கே. மகேந்திரன நமது தீவில் தமிழ் மணக்க முக்கியமாகப் பாடுபட்ட ஒருவராகும். நான் சிறுவனாக இருந்தபோது அவருடைய வழிகாட்டலில் எனது பேச்சுக்கலையை வளர்த்துக் கொண்டேன். சிறுவனாக இருந்தபோது பல கூட்டணி மேடைகளிலும் பேசியுள்ளேன். மேலும் ஈழத்தின் புகழ் பெற்ற படைப்பாளி ஆசிரியர் மு.தளையசிங்கம் அவர்களிடம் இரண்டு ஆண்டு காலம் படிப்பதற்கும் எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. சட்டத்தரணி எஸ்.கே. மகேந்திரன, ஆசிரியர் மு.தளையசிங்கம், கவிஞர் வில்வரத்தினம் போன்ற பலருடன் எனக்கு தொடர்பிருந்தது. தமீழத்தின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட மு.நவரத்தினம், தமிழறிஞர். கா.பொ.இரத்தினம், வீ.வீ.கே ஆறுமுகம் போன்றவர்கள் எல்லாம் தமிழ் வளர்த்த சூழலில் வளரக்கூடிய அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று நான் பல்வேறு துறைகளிலும் பேச்சுக்கலையை வளர்த்துக் கொள்ள இந்தப் பேராசான்களின் தொடர்பு முக்கிய காரணமாகும்.

கேள்வி : இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும், டென்மார்க்கில் இருந்து சமயப்பணிகளில் ஈடுபட்டவரும் மெய்ஞானக்குரல் என்ற நூலை வெளியிட்டவருமான காலஞ்சென்ற சித்ராமணாளன் நீங்கள் கூறும் எஸ்.கே. மகேந்திரனின் உறவினர், அவர் அழைத்தே சித்திராமணாளன் கனடா சென்றார்.. எஸ்.கே. மகேந்திரன் மாரடைப்பால் மரணித்த சில நாட்களில் இவரும் மரணமடைந்தார். ஒன்றாக இணையவும், ஒன்றாகவே உலகை விட்டுப்பிரியவும் நினைக்குமளவிற்கு அந்நியோன்னியமானவர்கள்.

சிறீதரன் : உண்மைதான் இருவருடைய பக்கம் பக்கமான மரணங்கள் பலருடைய உள்ளங்களைப் பாதித்தது தெரிந்ததே. மேலும் எஸ்.கே. மகேந்திரனிடம் நான் பெற்ற தாக்கம் சித்திரமணாளனிடமும் இருந்தது. அவரும் சிறந்த மேடைப்பேச்சாளர், வில்லுப்பாட்டு கலைஞர், நூல் வெளியீட்டாளர் என்று பல பாத்திரங்கள் வகித்தவர். அவர் எனது உறவினர்தான்.

கேள்வி : தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரனை பார்த்தசாரதியான கண்ணனின் அவதாரமென வர்ணித்து, நூல் எழுதி அதை எமக்கு தபாலில் அனுப்பியிருந்தார் சித்திராமணாளன். அதை நாம் பெற்றுக் கொண்ட அதே தினம் அவர் உயிரும் பிரிந்த செய்தி வந்தது. உயிர் கொடுத்து பிரபாகரனுக்காக நூல் எழுதிய உன்னதப் படைப்பாளி சித்திராமணாளன் என்பது பலருக்கு தெரியாது.

சிறீதரன் : உண்மைதன் சித்திராமணாளன் மேலும் அற்புதமாக பரிமளிக்க வேண்டிய கலைஞர் சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம் இன்றும் ஆற்ற முடியாத காயமே. எஸ்.கே. மகேந்திரனின் தாக்கம் கொண்ட கலைஞர்கள் வழியில் இடைவெளி ஏற்படாது என்னாலான பணிகளை நான் செய்துவருகிறேன்.

கேள்வி : இந்தப் பேச்சாளர்கள் தீவுப்பகுதிக்குள் மட்டும் அடங்கிப் போனவர்கள் அல்ல, பரந்துபட்ட ஞானம் உடையவர்கள்.. நீங்கள் எப்படி ?

சிறீதரன் : நான் தீவுப்பகுதியில் மட்டும் வாழ்ந்தவனல்ல யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் எல்லாம் பரந்துபட்டு வாழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு. தீவுக்குள் இருந்து டென்மார்க்வரை புலம் பெயர்ந்து வந்துள்ளேன், சகல இடங்களையும் சேர்ந்த மக்களுடன் நட்பாக வாழ இத்தகைய அனுபவமே எனக்கு துணையாக அமைந்தது. பொதுவாக தீவகத்தில் இருப்பவர்கள் தீவுக்குள் இருந்தாலும் கூட, வர்த்தகத்திற்காக இலங்கை முழுவதும் பரவியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கேள்வி : சரி டென்மார்க் வந்த பின்னர் உங்கள் கலைப்பணிகள் எவ்வாறு நகர்ந்தன..?

சிறீதரன் : 1987ம் ஆண்டு டெனிஸ் அகதிகள் உதவி சங்க ஆதரவில் ஓர்குஸ் நகரில் நடந்த பல்கலாசார விழாவில் நாடகம் ஒன்றைத் தயாரித்து மேடையேற்றினேன். எமது கலைத்திறனைக் கண்ட அதிகாரிகள் ஸ்கன்னபோ நகரிலும் ஒரு கலைவிழாவை நடத்தினார்கள். அதில் நான் நிகழ்த்திய சொற்பொழிவே டென்மார்க்கில் என்னை ஒரு பேச்சாளனாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து டென்மார்க்கிலுள்ள பல நகரங்களிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்த நான் பட்டிமன்றங்களையும் நிழ்த்த ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பட்டிமன்றப் பேச்சாளராகவும் பின்பு பட்டிமன்ற நடுவராகவும் பல பட்டிமன்றங்களை நிகழ்த்தியுள்ளேன்.

கேள்வி : தமிழ் மேடைப்பேச்சில் இருந்து ஆன்மீகத்திற்குள் எப்படி நுழைகிறீர்கள்.. ?

சிறீதரன் : தமிழ் மேடைப்பேச்சுக்களோடு நான் பிறந்து வளர்ந்த இடத்தின் பின்னணி காரணமாக சமயத்தில் ஈடுபாடு எனக்கு அதிகமாக இருந்தது. தமிழ்ப்பணியாளன் சைவத்தோடு இணையும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வெறும் மதப்பிரச்சாரமாகப் போய்விடக் கூடாது. மூட நம்பிக்கைகளை மதம் என்று கருதுவதும், அதனடிப்படையில் மதங்கள் மீது மலினமான விமர்சனங்களை வைப்பதும் எளிமையானது. எனவேதான் சைவத்தில் உள்ள சிறப்புக்களை மூட நம்பிக்கைகளை விலத்தி அடையாளம் காட்ட எனது பணி அவசியம் என்று உணர்ந்தேன். இந்து சமயம் என்பது ஒரு சமயமல்ல அது பல சமயங்களின் தொகுப்பு என்பதைப் புரிய வைக்குமாறு எனது உரைகளை வடிவமைத்தேன். மக்கள் மத்தியில் அது பெரிய வரவேற்பைப் பெறுவதையும் புரிந்து கொண்டேன்.

கேள்வி : தாங்களும் டென்மார்க்கின் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருக்கிறீர்கள். இதன்மூலம் தாங்கள் ஆற்றும் பணி யாது ?

சிறீதரன் : சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் முயற்சியுடன் சமய சம்மந்தமான, அறிவுபூர்வமான எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமெனப் பாடுபட்டு வருகிறோம். மேலும் நமது நகரை சுற்றி வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு எழுத, வாசிக்க, சமய அறிவுகளை போதிக்க நேரம் ஒதுக்கியுள்ளேன். தற்போது எனது தமிழ், சமய வகுப்புக்கள் ஸ்கனபோ நகரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கேள்வி : இனி பொதுவான பார்வைக்கு வருவோம்..டென்மார்க்கில் தமிழ் கலை, கலாச்சார வளர்ச்சிகள் பற்றிய தங்களின் பார்வை என்ன ?

சிறீதரன் : டென்மார்க் சிறிய நாடாக இருந்தாலும் தரமான தமிழ் அறிஞர்கள் நிறைந்த நாடு என்பதை மறுக்க முடியாது. டென்மார்க்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாக்கள் இங்கு கலை வளர்ந்த வேகத்திற்கு அதி சிறந்த எடுத்துக்காட்டு. அன்று தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணியாற்றிய அத்தனைபேருடனும் எனக்கு தொடர்புண்டு. டென்மார்க்கின் அனைத்துப் படைப்பாளிகள், கலைஞர்களுடனும் எனக்கு நெருங்கிய நட்பும் உண்டு. நாம் ஒருவரை ஒருவர் வளர்ப்பதிலும், ஒருவருக்கு மற்றவர் ரசிகராக இருப்பதிலும் பெருமையடைகிறோம். டென்மார்க்கில் கடந்த பத்து ஆண்டுகளாக கலை வளர்ச்சியில் நிலவிய தேக்கம் நீங்கி இப்போது மறுபடியும் புது மெருகு அடைய ஆரம்பித்திருக்கிறது. அதற்கு அலைகள் பத்தாண்டு விழா நிகழ்வுகள் ஒரு சான்றாகும். மேலும் மறுபடியும் முத்தமிழ் விழா வரவிருப்பதாக அறிகிறேன், அதற்காக மகிழ்கிறேன். கலைகளுக்கும் அலைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. கலைகளும் விழுந்து எழுந்து சென்றால்தான் அலைகள் போல அழிவடையாமல் இருக்கும். கலைகளை தட்டையாக வைத்திருந்த நாடுகளில் வளர்ச்சி வீழ்ச்சி என்ற பேச்சில்லாமல் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். டென்மார்க்கில் மட்டும் அப்படி இல்லை என்பது பெருமைதரும் விடயமாகும்.

கேள்வி : நமது கேள்விகளுக்கு இதுவரை பதில்களை வழங்கினீர்கள் இனி கேள்விகள் இல்லாமலே உள்ளத்தைத் திறக்கும் உங்கள் நேரமாகும்..

சிறீதரன் : கடந்த பத்தாண்டுகளாக டென்மார்க்கில் அலைகள் ஆற்றிவரும் பணிகளை பாராட்ட வேண்டுமென மனது ஆவலடைகிறது. டென்மார்க்கிற்குரிய செய்திகளை டென்மார்க் வாழ்வுக் கோணத்தில் இருந்து தருவதைப் போன்ற உயிர்ப்பை மற்றய இடங்களில் இருந்து வரும் ஊடகங்களால் பெற முடியாது. நமக்கென்று ஒரு வாழ்க்கை, நமக்கென்று ஓர் ஊடகம் இப்படி நினைக்கும்போது நமது தனித்துவம் பிரகாசமடைகிறதல்லவா…? கலை மக்களை பண்படுத்த வேண்டும். அதில் பக்கச் சார்பு இருத்தல் கூடாது, வேண்டியவர் வேண்டாதவர் பார்த்தால் அவ்வளவுதான் கலையின் ஜீவன் போய்விடும். பின் எலும்புக் கூடுகளை கயிற்றில் கட்டி இழுத்து ஆட்டுவித்தது போல ஆடவைக்க வேண்டியதுதான். கலைஞன் கயிறுகட்டி இழுத்து ஆட்டுவிக்கும் எலும்புக் கூடாக இருத்தல் கூடாது…
மாற்றுக் கருத்தாளர் என்று புறந்தள்ளுவதல்ல அனைவரையும் உடன்பாடான இடங்களில் ஒற்றுமைப்படுத்துவதே உண்மையான கலைத்துவ ஒற்றுமையாகும். கலையில் ஒற்றுமை வந்தால் அது வாழ்வை ஒற்றுமையாக்கும்.
ஆன்மீகம், இலக்கியம் போன்றவற்றை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது. எனது ஆன்மீகச் சொற்பொழிவுகளை இறுவெட்டாக வெளியிடும் எண்ணமும் உள்ளது.
உலகளாவிய புங்குடுதீவு ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும், அதன் மூலம் செய்யப்படாத பல நற்பணிகளை செய்ய வேண்டும் என்ற ஆவலும் எனக்கு இருக்கிறது.

பேட்டி : அலைகள் ஆசிரியர். 13.05.2010

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சுந்தரேஸ்வரக் குருக்கள்

கனேசராசக்  குருக்கள்   சுந்தரேஸ்வரக் குருக்கள் 
-------------------------------------------------------------------
புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகக்  கொண்ட இந்த இந்து மதகுருவானவர் மடத்துவெளி கமலாம்பிகை மக வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் புங்குடுதீவு கிழக்குப்  பகுதிகளில்   உள்ள பல ஆலயங்களில் தந்தையுடன் இணைந்து கிரியைகளை மேற்கொண்ட பின்னர் சுவிசுக்கு இடம்  பெயர்ந்தார் சுவிசில் உள்ள ஓல்டன் மாநகரில் சில சைவ அடியார்களை அழைத்து இங்கே  ஒரு ஆலயத்தினை அமைப்பதகான முயற்ற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.இந்த வகையில் மனோன்மணி அம்பாள் என்னும் பெயரில் இந்த ஆலயம் உறுவாக்க்க பாடு பட்ட  இந்த சைவகுரு இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாட்டார்.அனமியில் புதிய ஆலயத்தை அமைக்கும் பணியில் ஈடுபடிருந்தார் சொந்த காணியை வங்கி அதில ஒரு அழகான ஆலயத்தை காடும் எண்ணத்தில் மக்களிடம்  கணிசமான நிதியை சேர்த்து வைத்து கட்டும் பணிகளில் ஈடுபட்டு  வருகிறார் சுவிசில் உள்ள எராளமான இந்து சமயத்தவரின் கிரியைகளை திறம்பட  நடத்தி முடித்தவர் .ஐவரும்   ஏராளமான தாயகத்துகான   உதவிகளையும் வழங்கி சுவிச்ல் தமிழரின் சேவையையும்  செய்து வந்துள்ளார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப காலம் தொட்டு போசகராக இருந்தும் நிறைய பணிகளை செய்துள்ளார் 

நாகரத்தினம் கணேசரத்தினம் , சாந்தரதினம் சகோதரர்கள்

நாகரத்தினம்  கணேசரத்தினம் ,  சாந்தரதினம்        சகோதரர்கள்

----------------------------------------------------------------------------------
புங்குடுதீவு   ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகரத்தினம் கோணேஸ்வரி தம்பதியின் புதல்வர்களான கணேசரத்தினம் சந்தரத்தினம் சகோதரர்கள் சுவிசிலே சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள் .புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர்கள் தமது நிலைமைப் பருவத்திலேயே நெடுங்கேணியில் வர்த்தக நிறுவனங்களை நிறுவி உயர்ந்த நிலையில் வணிகம் செய்து வந்தார்கள்.சுவிசிலும் இவர்கள் இரண்டு பிரபலமான வர்த்தக நிறுவனங்களை அமைத்துளார்கள். சுவிஸ் ஜூரிச் நகரிலே என் எஸ் யுவல்லேரி யும் பெர்ணிலேஎன் ஆர் ஜுவல்லரி அண்ட் டெக்ஸ்தைலையும் தம்மகத்தே கொண்டுள்ள இவர்கள் சுவிசில் நடைபெறும் பல நல்ல சம்மோக தொண்டுகளுக்கும் உதவி வருகிறார்கள் .

புதன், 28 செப்டம்பர், 2011

thirumathi (ராஜகோபால் )

பிரசன்னா  சாதுஜா (ராஜகோபால் )

புங்குடுதீவு பத்தாம் வட்ட்ரத்தை
பிறப்பிடமாக கொண்ட பிரசன்னா  சாதுஜா   (ராஜகோபால் ) கொக்குவிலில் ஆரம்பகல்வியை கற்ற பொது இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தார் .அங்கே சில ஆண்டுகள் ஆங்கில மூலக் கல்வி கற்ற பின்னர் சுவிசுக்கு புலம் பெயர்ந்து உயர்கல்வியை கற்று தேறினார் .தாயகத்தில் இருந்த காலத்தில் முறைப்படி பரத நாட்டியத்தை சாந்தினி சுப்பையாவிடம் கற்று தொடன்ர்து இந்தியாவிலும் நாடிய கல்வியை தொடர்ந்திருந்தார் .சுவிசுக்கு வந்ததும் பரதக்கலையை வாணி நடராசாவிடம் கற்று பின்னர் திருக்கொநேச்வர நடனாலயத்தில் தொடர்ந்தார் .வெகு குறைவான் காலத்திலேயே பரத்தின் நுணுக்கங்களை எல்லாம் கற்றதனால் 1996இல் பெர்னில் தனது அரங்கேற்றத்தை மேடையேற்றினார் .   திருக்கொனேஸ்வரா நடனப்   பள்ளியின் முதல் வரிசை மாணவிகளின் பட்டியலில் இடம்பிடித்து உரிய காலத்தில் அரங்கேற்றத்தை செய்து கொண்டார்.இந்த நடனப் பள்ளியில் அரங்கேற்றம் செய்த இரண்டாவது மாணவி இவராவார்.அரன்கேற்றதுடன் நின்று விடாது பரதனாடிய ஆசிரிய உரித்துக்கான கல்வியை மேற்கொண்டு அதற்கான தகுதியை அடைந்த இவர் தொடர்ந்து தான்  கற்ற கல்வியை வீணாக்காது மற்றவரும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கோடு சுவிசில் பற்றாக்குறையாக உள்ள நடன ஆசிரியர்களின் குறை நீங்கு முகமகவும் தானே ஒரு  புதிய நடனப் பள்ளியை ஆரம்பித்து  ஏராளமான மாணவர்களுக்கு நடனக் கலையை  புகட்டி வருகிறார்.தனது பிறந்த ஊரின் குலதெய்வமாம் கண்ணகியின் பெயரிலே  கண்ணகை பரத கூடம் என்ற பெயரில்தனது பாடசாலையை அழகுற நாமம் இட்டுள்ளது குறிப்பிடத் தக்கது  புகழ் போதை  இல்லாத இந்த ஆசிரியை ௨௦௧௦ இல் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் வேரும் விழுதும் நிகழ்வை தனது மாணவர்களை கொண்டு தனது நாட்டிய கோலங்களால் அழகுற  செய்தார் .இந்த நிகழ்வில் இவரது மாணவர்களின் தசாவதாரம் நாட்டிய நாடகம் பார்வையாளர்களை மெய் மறக்க செய்திருந்தது .இவரில் மாணவர்கள் பலர் நாட்டிய மயில் போன்ற நடன விழ போட்டிகளில் பங்கு பற்றி ஏராளமான பரிசில்களை பெற்றுள்ளனர்.

செல்லத்துரை சதானந்தன்

செல்லத்துரை  சதானந்தன் 


புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை  பிறப்பிடமாகக் கொண்ட சதானந்தன் ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்தில் கற்றார் .எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த சதானந்தன் சுவிசின் பல மேடைகளில் ^^பாட்டிங் பாட்டிங் ^^ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை ஈழத்துக் கலைஞர்கள் கோமாளிகள்  பாணியில் நடத்தி புகழ் பெற்றார் .சிறந்த உதைபந்தாட்ட வீரராக விளையாட்டுக்  கழகங்களில்   களமாடிக் கொண்டிருந்த காலம் அது.எமது தமிழ் மக்களை மேற்கு நாடுகளின் தரத்துக்கு சிறந்த விளையாட்டு  வீரர்கள் ஆக்கச்  சரியான வழி எதுவென சிந்திக்கலானார் .அதன் பிரகாரம் சிறுவயதில் இருந்து படிப்படியாக முறையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ரீதியில் லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகத்தை உருவாக்கி பல வயதுப் பிரிவுகளிலும் வீரர்களை உள்வாங்கி பயிற்ருவித்து சுற்று போட்டிகளை சந்திக்க செய்தார் இதிலே பெரும் வெற்றிக  ளைக்   கண்டார் .சுவித்சர்லாந்தில்யே அதிக சாதனைகளை படைத்து அதிகூடிய வெற்றிக் கிண்ணங்களை பெற்று வருகிற ஒரு கழகம் இதுவாகும் .முக்கியமாக  புங்குடுதீவு  மண்ணை சேர்ந்த வீரர்களை பெரும்பாலும் உள்ளடக்கிய கழகம் இதுவேயாகும் .பல அமைப்புகளுடன் இணைந்து விளையாட்டுத் துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார் .அத்தோடு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திலும் தன்னை இணைத்து கொண்டு இன்று வரை அறிய பல பணிகளை செய்ய உறுதுணையாக இருந்துள்ளார் .மேலும்ஐரோப்பாவின் இயந்திரமாய
வாழ்க்கைக்கு மத்தியில் இசைக்குழுக்களை நடத்துவது கஷ்டமா என உணர்ந்து நவீன வடிவமான கரோக்கோ இசைக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார். சுவி மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் இசை நிகழ்சிகளை நடத்தி புகழோடு விளங்கும் இவரது சுவிஸ் ராகம் இசைக்குழு பெரும்பாலான தாயாக பணிகளுக்கென நிதிப் பங்களிப்பையும் செய்து வருகிறது.இந்த இசைக் குழுவின் அறிவிப்பாளராகவும்  இயக்குனராகவும் இருந்து வருகிறார் 

இராசையா சண்முகராசா

இராசையா சண்முகராசா 
 புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை
பிறப்பிடமாகக் கொண்ட சண்முகராசா ஆரம்பக்கல்வியை ஊரதீபு திருநாவுக்கரசு வித்தியாசாலையிலும் தொடர்ந்து கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியையும் கற்று தெரிய பின் எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு(Bern  )புலம் பெயர்ந்தார் .அந்த காலம்  எமது தாய் மொழியில் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் இல்லாத ஒரு காலம்.அதனை விட சுவிசுக்கு தமிழர் வந்த உடனேயே சுவிஸ் மொழிகளைக் கற்க முடியாத நிலை. சன்முகராசாவும் இன்னும் சில இளைஞர்களும் இணைந்து புதிய மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் விதமாக மனிதம் என்னும் பெயரில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்கினார்கள்.இந்த அமைப்பின் மூலம் மனிதம் என்னும் சஞ்சிகையை பிரசுரித்தார்கள். கணணி புழக்கம் இல்லாத அல்லது தமிழ் எழுத்து வரிவடிவம் வராத அந்த காலத்தில் வெறுமனே நிழல்படபிரதி எடுக்கும் முறையை மட்டும் பயன்படுத்தி இந்த சஞ்சிகையை வெளியிட்டனர் .வேறு தமிழ் பத்திரிகைகளில் தாயாக இந்திய நாடுகளில் வரும் முக்கிய செய்திகள் கட்டுரைகளை வெட்டி பிரதி எடுத்து இணைத்தனர் . மிகுதியை தமது கை எழுத்து பிரதியாக எடுத்து சேர்த்தனர் .
புலம்பெயர் நட்டு செய்திகள் தகவல்கள்  பயனுள்ள கட்டுரைகள் எமகீல்லாம் அந்த வேளையில் தேவையான அம்சங்கள் வள தொடங்கியுள்ள இந்த நாடுகள் பற்றிய தகவலகள் என சிறப்பாக தொகுக்கப்பட்டு வெளிவந்த சஞ்சிகைகள் மனிதம் எனலாம் .மதம் ஒரு தடவையாக வெளிவந்த இந்த மனிதம் சஞ்சிகையை ஆசிரிய பீடத்தில் இருந்து அலங்கரித்தார் இ.சண்முகராசா .சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த மனிதம் வெளியானது பாராட்டத் தக்கதே 

செவ்வாய், 27 செப்டம்பர், 2011


தகவல் அரங்கம் பகுதி 1
Posted on December 29, 2009 at 11:22 PMComments comments (0)

பெரியோர்கள் 1

பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கனகசுந்தரம் பாலகுமார்

கனகசுந்தரம் பாலகுமார் 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் மடதுவெளியைப் பிறப்பிடமாக கொண்ட
பாலகுமார் தனது ஆரம்பக் கல்வியை கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கற்ற பின்னர் யாழ் இந்து கல்லூரியில் உயர்கல்வியை பெற்றார் .மடத்துவெளி சனசமூக் நிலையத்தின் ஆரம்ப களம் தொட்டே அதன் வளர்ச்சிக்கு பாடுபட்ட இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.மடத்துவெளி சனசமூக நிலையத்தின் உதைபந்தாட்ட அணியின் முன்னணி தாக்குதல் வீரரான பாலகுமார் பல சாதனைகளை அந்த மண்ணில் படைத்துள்ளார் .இவர் 15. 01 . 1985 இல் தாயகத்தை விட்டு நீங்கி சுவிட்சர்லாந்தில் குடியேறினார் .சுவிசின் பாசல் நகரில் வசித்து வரும் இவர் இங்கேயும் தனது விளையாட்டு திறமையால் சிறப்புற புகழ் பெற்றார் .பாசல் தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகராகிய பாலகுமார் அதனை நிறுவினார்  இந்தக் கலக்கம் சுவிசிலேயே
முதன்முதலாகவும் ஒரே ஒருகழகமாகவும் பதிவு செய்து முறைப்படி சுவிசர்லாந்து கழகங்களுக்கு இணையாக லீக் எனப்படும்பிரிவில்  சம்மேளன அடங்கலில் உள்வாங்கப் பட்டதாகும் .இந்த கழகத்தின் அணித்தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து தொன்னூறுகளில் பல சாதனைகளைச் செய்ய வழிகாட்டினார்.சுவிற்ற்சர்லாந்தின் பல கழகங்களின் உருவாக்கத்துக்கும் சுற்றுப் போட்டிகளுக்கும் முன்னோடியாக  உதவி புரிந்தார் .இந்த கழகத்தின் மூலம் பல சமூக பங்களிப்புகளையும் ஆற்றி வந்துள்ளார் .இன்றும் பாசல் நகரின்  விளையாட்டு துறை இவரை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றது 

எஸ் .கண்ணதாசன்

எஸ் .கண்ணதாசன் 
 புங்குடுதீவின்  12ஆம்
வட்டாரத்தை சேர்ந்த கண்ணதாசன் கணேச மக வித்தியாலயம் .மக வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்று எண்பதுகளின் மத்தியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பதிலேயே அதில் சேர்ந்து பணியாற்றியவர்.சுவிஸ் லவுசான்(LAUSANNE) நகரில் வாழும் இவர் ஒன்றியத்தின் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்தார் .கண்ணதாசன் இளமை காலத்தில் இருந்தே தமிழ் மேல் ஆர்வம் கொண்டு கவிதை , விமர்சனங்களை எழுதி வருகின்றார் .தனது எழுத்துக்களில் தன எண்ணியதை சொல்ல வந்ததை ஆணித்தரமாக எழுதுவது இவரது சிறப்பம்சம்..பிறந்த ஊரில் பற்று கொண்ட இவர் சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர் .சொந்த நாடிலும் தான் வாழுகின்ற நாட்டிலும் நிறைய சமொக்கப் பணிகளில் தன்னை ஈஎடுபடுத்தி உள்ளார் 

ஐயாத்துரை தர்மகுலசிங்கம்

ஐயாத்துரை தர்மகுலசிங்கம் 

புங்குடுதீவு எட்டாம் வட்
டாரம் நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த யாதுரை தர்மகுலசிங்கம் கமலம்பிகைவிதியலயத்தில் ஆரம்ப கல்வியைத் தொடங்கி பின்னர் உயர்கல்வியை மகா வித்தியாலயத்தில் முடித்த பின்னர் பல்கலைக்க் கழகம் புகுந்து கலைத்துறைப் பட்டதாரியாகினார் .புங்குடுதீவு கிழக்கின் பிரபலமான சமூகத் தொண்டர் ஐயாத்துரை ஆசிரியரின் மகனான இவர் தனது தந்தைக்கு சமூக சேவையில் முழு உதவியும் புரிந்து வந்தார் .வல்லன் சனசமூக நிலையம் ,மடத்துவெளி சனசமூக நிலையம் ,கிராம முன்னேற்ற சங்கம் என அணைத்து சமூக அமைப்புகளிலும் சேவை ஆற்றியவர.சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக சுவிசில் வசித்து வரும் இவர் இங்கு சிறப்புற பிஞ்சு மொழியை கற்று உள்ளார் .இங்கும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஆரம்பம் முதலே அவர் வாழும் வோ( VAUD ) மாநிலப் பொறுப்பாளராக இருந்து வருகிறார் 

பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ்

பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ் 

 புங்குடுதீவு ஏழாம் வட்டாரம்
அ.ப.பாலசுப்பிரமணித்தின் புத்திரனான சிவசூரியதாஸ் தந்து உயர்கல்வி வரை கமலம்பிகைவிதியால்யதில் கற்றபின்ன்னர் சுவிட்சர்லாந்துக்கு   .  .  வந்து சேர்ந்தார் . சுவிஸ் லவுசான் நகரில் குடியேறிய மோகன் ஏன்று அழைக்கப் படும்   சிவசூரியதாஸ் தந்து வழமையான தொழிலோடு கணணியியலை திறம்பட கற்று வந்தார்.கணனியின் எல்லா வகையான தொழில் நுட்பத்தையும் கற்று தெரிய இவர் தான் கற்றதை மற்றவரும் பெறவேண்டும் என்ற நல்நோக்கோடு வாழ்ந்து வரும் நகரில் கணணி அறிவியலை நீண்ட காலமாக கற்பித்து வருகிறார். இவருடைய சேவையைப் பெற்று ஏராளமான மாணவர்கள் கணனியில் முழுமையான அறிவை உள்வாங்கி வெளிய்ரி உள்ளது குறிப்பிடத்தக்கது .புங்குடுதீவு மக்கள் வில்லிபுணர்வு ஒன்றியத்தின் ஆரம்பகால முதலே பிராந்திய பொறுப்பாளராக வும் பங்காற்றி ஊருக்கான பணியில் தன்னை இணைத்துள்ளவர் ஆவார் .

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி

திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி 

புங்குடுதீவு ஒன்பதாம் வட்டா

இராசமாணிக்கம் ரவீந்திரன்1

புங்குடுதீவு எட்டம் வட்டாரம்
மடத்துவெளியை பிறப்பிடமாக கொண்ட இராசமாணிக்கம் ரவீந்திரன்27.12.1984. . இல்தாயகத்தில் இருந்து
 சுவிசுக்கு இடம்பெயர்ந்தார் .சுவிசில் வோ மாநிலத்தின் பே என்னும் நகரத்தில் தனது ஆரம்ப வாழ்க்கையை பழக்கி கொண்டவர் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தயாளிநியைத் தன வாழ்க்கை துனையாக்க்கி கொண்டார் .
கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி வரை கற்ற இவர் தனது சகோதர்களுடன் இணைந்து கொழும்பு மாநகரில் வர்த்தக நிறுவனங்களை திறம்பட நடத்தி வந்தார் .மடத்துவெளி சனசமூக நிலையத்தின் செவைபுரிதலில் தன்னை இணைத்துக் கொண்டவர் இந்த நிலையத்தின் வாசிகசாலையின் நூலகராக பணியாற்றி உள்ளார்.சுவிசில் சிறந்த கரப்பந்தாட்ட வீரராக எண்பதுகளில் திகழ்ந்த இவர் இங்கும் ஆரம்பத்தில் லவுசான் சொலோதூன் ஆகிய நகரங்களில் இரு வர்த்தக நிறுவனங்களை உருவாக்கி இருந்தார் .பின்னர் தற்போதைய சாயி இம்போர்ட் என்ற சுவிசின் பிரபலமான ஏற்றுமதி இறக்குமதி ஸ்தாபனத்தை நிறுவி திறம்பட வணிகம் செய்து வருகிறார்.இதன் மூலம் ஈட்டிய  பொருளில் தாயக விடுதலைக்கான பங்கோடு எமது ஊருக்கான பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறார்.புங்குடுத்ழீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே போசகராக அங்கம் வக்க்கித  ரவீந்திரன் முதல் ஒன்றியத்தின் தலைவராக பொறுப்பேற்று அதன் பணிகளை செவ்வனே ஆற்றுகிறார்.இவர் தனிப்பட கமலாம்பிகை வித்தியாலயத்தின்நுழைவாயிலைஅழகுற  செப்பனிட்டு கடந்த மார்ச் 2011இல்  திறந்து வைத்துள்ளார்  .அத்தோடு சண்முகநாதன் வித்தியாலயம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு இயங்குவதற்காக முதல் பங்களிப்பை வழங்கி தொடக்கி வைத்துள்ளார்.தாயக காப்பு ,சமூக சேவை.ஊருக்கான பங்களிப்பு என பல வகையிலும் முன்னின்று முகம் சுளிக்காது உதவி வரும் இவர் தான் செய்கின்ற நற்காரியங்களுக்கு விளம்பரம் தேடிகொள்ளாத  தன்னடக்கவாதியாவர் .இவரது உதவும் பணிகளில் இவரது சகோதர்களும் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

வியாழன், 8 செப்டம்பர், 2011

சதாசிவம் சிவகுமார் (சுதன் )

சதாசிவம் சிவகுமார் (சுதன் )
----------------------------------------
புங்குடுதீவு 3ஆம்
வட்டாரத்தை சேர்ந்த   இவர் சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்து இரு தசாப்தங்கள் கடந்து விட்டது.புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் மகா வித்யாலயா தில் கல்வி கற்ற இவர் சமூக தொண்டை சிரித்த முகத்தோடு ஏற்று செய்வது அலாதியானது.நீண்ட காலமாக தாயக விடுதலைக்காக சிறந்த செயற்பாடுகளில் தன்னை  நிரூபித்தவர்.ஐரோப்பாவின் இயந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தாயக நேசிப்பின் உச்சமாய் இவர் திகழ்கிறார் .ஆரம்பத்தில் இருந்தே புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர்
ஒன்றியத்தின் அனைத்து செயல் பாடுகளிலும் முன்னின்று செயல்பட்டவர் 

குகராசன்1


விசுவலிங்கம்  குகராசன் 
---------------------------------

சுவிட்சர்லாந்துக்கு  புலம்பெயர்ந்து சுமார்  வருடங்களாக வாழ்ந்து வரும் குகராசன் புங்குடுதீவு  12ஆம் வட்ட்ரதைப் பிறப்பிடமாக கொண்டவர் .கணேச மக வித்தியாலய பழைய மாணவரான குகன் முத்தமிழ் செல்வியை துணையாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார் .தாயகத்தில் தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவிலின் தொண்டிலே தன்னை இள வயதில் ஈடுபடுத்திக் கொண்டவர்
சுவிசில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் தொடர்ந்து மத்திய குழு உறுப்பினராக இருந்து சிறப்பாக சேவை செய்து  வருகிறார் .ஒன்றியத்தின் செயல்பாடுகளை கோவைப் படுத்தல் நிதியியல் கையாளல் ,ஒழுங்கு படுத்தல் என இவரது பணிகளை ஒன்றியம் உள்வாங்கி வளர்ச்சி கண்டுள்ளது உண்மைகணேச
  வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.சுவிஸ் பேணில் உள்ள தாய்மொழி மற்றும் அழகியல் கல்வியை கற்பிக்கிற தமிழருக்கான  அமைப்புக்கு பொறுப்பாக இருந்து நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்தார் .அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .கணேச
  வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .

நிமலன்1

அரியபுத்திரன்  நிமலன்
----------------------------------
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த நிமலன் கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் ஸ்டான்லி கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றுத் தேறியவர் .சுமார் 25வருடங்களாக சுவிசில் வசித்து வரும் இவர்   தாயகத்தில் இவரது ஒன்று விட்ட சகோதரரான எஸ்.கே.மகேந்திரனின் பாசறையில் வளர்ந்து ஊரதீவு இளம்தமிழர் மன்றம் , சனசமூக நிலையம் என்பவற்றின் முக்கிய நிர்வாகப் பதவிகளில் இருந்து சமூக சேவை செய்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் ஆன்மீகப்பணி சமுக ப்பணி என்பவற்றில் ஈடுபாடு காடடும் நிமலன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணவு ஒன்றியத்தின் செயல்பாடுகளில் தன்னை ஒருங்கிணைத்து பணியாறுகிறார்.ஆரம்பத்தில் பிராந்திய பொறுப்பாளராக இருந்து வந்த நிமலன்  2009முதல் செயலாளராக திறம்பட திட்டமிட்டு ஒன்றியத்தை வளர்ச்சி பாதையில் இட்டு செல்கிறார்ஒன்றியம் அண்மையில் நடாத்திய ''வேரும் விழுதும் '' விழா இவரது செயல் பாட்டின் வேகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.சிறந்த எழுச்சி முக்கு பேச்சாற்றல் கொண்ட நிமலன் ஆன்மீகப் பணியிலும் செவ்வனே தன்னை அர்ப்பணித்துள்ளார் .பேரன் சைவநெறிகூடத்தின் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சைவ தொண்டில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நிமலன் திட்டமிட்டு செயல்பாடுகளை கொண்டு செல்வதில் வல்லவராக திகழ்கிறார் .இவரது துணைவியாரும் நல்ல சைவ சமய தொண்டர்கள் குடும்பத்தில் இருந்து வந்தமையினால் இவருக்கு ஈடுகொடுத்து ஆண்மீகப்பநியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது 

சின்னதுரை கருணாமூர்த்தி 1

சின்னதுரை கருணாமூர்த்தி 1
--------------------------------------
புங்குடுதீவு பத்தாம்
வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கருணாமூர்த்தி புங்குடுதீவுகணேச மக வித்தியாலயம் .புங்குடுதீவுமகாவித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்று சுவிசர்லாந்துக்கு எண்பதுகளின் ஆரம்பத்தில் புலம் பெயர்ந்து வந்தார்.காலக்கிரமத்தில் மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த மஞ்சுளாவை கரம்பிடித்து இல்லறம் புரிகிறார்.கருணாமூர்த்தி ஆரம்பத்தில் புங்குடுதீவு கணேச
வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டு தொண்டாற்றினார் . அதன்
நிர்வாகத்தில் பல பதவிகளை அலங்கரித்து திறம்பட இயக்கி வந்தவர் .
பின்னர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக இணைந்து ஒன்றிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் .நிர்வாகத்தின் செயல்பாடுகளை கொவைப்படுத்தி திட்டமிட்டு பணியாற்றியவர்.
பேரன் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்திலும் தனது ஆன்மீகப் பணியை செவ்வனே ஆற்றி உள்ள கருணாமூர்த்தி சைவ சமய ஈடுபாடு மிகக்  கொண்டவர்.இந்த  ஆலயத்தின் நிர்வாக சபையில் இவர் பொருளாளராக இருந்து வலி நடத்திய களம் பொற்காலம் எனலாம்.நேர்மை தூய்மைக்கு இலக்கணமாக  இந்த காலத்தில் இவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார்  திருமுறைகளை பக்திபரவசமாக ஓதுவதில் வல்லவர்.தமிழ் மக்கள் சுவிசுக்கு புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் சைவ சமயக் கிரியைகளான மரணச சடங்கு அந்தியேட்டி மஞ்சள் நீராட்டு விழ திருமணம் என் அனைத்திலும் முன்னின்று சரியான முறைப்படி செய்து உதவி வந்தவர் எனலாம்  இவரது சகோதரியின் கணவரான தம்பியையா தேவதாஸ் சிரமப்பட்டு எழுதிய  ^புங்குடுதீவு-வாழ்வும் வளமும் ' என்ற நூலினை தானே பொறுப்பேற்று வெளியிட்டு வைத்ததோடு சுவிட்சர்லாந்தில் அந்த நூலின் வெளியீட்டையும் சிறப்பாகக நடத்தி வைத்த  பெருமைக்குரியவர் . அதன்
நிர்வாகத்தில் பல பதவிகளை அலங்கரித்து திறம்பட இயக்கி வந்தவர் .
பின்னர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக இணைந்து ஒன்றிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் .நிர்வாகத்தின் செயல்பாடுகளை கொவைப்படுத்தி திட்டமிட்டு பணியாற்றியவர்.
பேரன் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்திலும் தனது ஆன்மீகப் பணியை செவ்வனே ஆற்றி உள்ள கருணாமூர்த்தி சைவ சமய ஈடுபாடு மிகக்  கொண்டவர்.இந்த  ஆலயத்தின் நிர்வாக சபையில் இவர் பொருளாளராக இருந்து வழி   நடத்திய காலம் பொற்காலம் எனலாம்.நேர்மை தூய்மைக்கு இலக்கணமாக  இந்த காலத்தில் இவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார்  திருமுறைகளை பக்திபரவசமாக ஓதுவதில் வல்லவர்.தமிழ் மக்கள் சுவிசுக்கு புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் சைவ சமயக் கிரியைகளான மரணச சடங்கு அந்தியேட்டி மஞ்சள் நீராட்டு விழ திருமணம் என் அனைத்திலும் முன்னின்று சரியான முறைப்படி செய்து உதவி வந்தவர் எனலாம்  இவரது சகோதரியின் கணவரான தம்பியையா தேவதாஸ் சிரமப்பட்டு எழுதிய  ^புங்குடுதீவு-வாழ்வும் வளமும் ' என்ற நூலினை தானே பொறுப்பேற்று வெளியிட்டு வைத்ததோடு சுவிட்சர்லாந்தில் அந்த நூலின் வெளியீட்டையும் சிறப்பாகக நடத்தி வைத்த  பெருமைக்குரியவர் .
1.செல்லத்தம்பி சிவகுமார் (செல்லா)
-------------------------------------------------
புங்குடுதீவு
ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிவகுமார் ஸ்ரீ கணேச மகா வித்தியாலய த்தில் கல்வி கற்றார்.சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்து தற்போது சுவிசில் வசித்து  வரும் சிவகுமார் தனது முறைப்பெண்ணான நகேஸ்வரியை மணந்துள்ளார்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்தே மத்திய குழு உறுப்பினாராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.ஒன்றியத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாரிய பணியை செய்து செவ்வனே முடித்து வைத்த பெருமைக்குரியவர் .ஒன்றியத்தின் நிதியியலை சிறப்பாக கையாண்டவர்.அத்தோடு சுவிசில்  நீண்ட காலமாக தாயக விடுதலை பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.ஆரம்பத்தில் சுவிஸ் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயல்பாடுகளிலும் முழுமனதுடன் செயலாற்றியவர் சிவகுமார் .